ஜோகூர் இளவரசரை அவமதித்த இளைஞனுக்கு ஓராண்டுச் சிறை

teenஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான் இப்ராகிமை  அவமதிக்கும்  கருத்துகளைப்  பதிவு  செய்த  குற்றத்தை  ஒப்பிய  முகம்மட்  அமிருல்  அஸ்வான்  முகம்மட்  ஷக்ரிக்கு  ஓராண்டுச்  சிறைத்  தண்டனை  விதிக்கப்பட்டது.

ஜோகூர்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  தமக்கெதிராக  வாசிக்கப்பட்ட  குற்றச்சாட்டுகளை  அமிருல்,19, ஒப்புக்கொண்டார்  என  சினார்  ஹரியான்  கூறியது.

அவர்மீது  வாசிக்கப்பட்ட  குற்றப்பத்திரிகையிலிருந்து  கிளந்தானைச்   சேர்ந்த   அமிருல்   முகநூல்  பக்கத்தில்  ‘Miyo Castello’  என்ற  புனைப்பெயரில்   மார்சுக்கும்  ஏப்ரலுக்குமிடையில்   இளவரசரை  அவமதிக்கும்  கருத்துக்ளைப்  பதிவுசெய்ததாக  தெரிகிறது.