சுங்கை புசாரில், பிஎன் விளம்பரப் பலகைகளில் உள்ள பிஎன் வேட்பாளர் புடிமான் முகம்மட் ஸோதியின் படத்தின்மீது சிவப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டிருந்தது. இரண்டு விளம்பரப் பலகைகளில் அவ்வாறு செய்யப்பட்டிருந்தது.
அந்த விளம்பரப் பலகைகள் சுங்கை புசாரிலிருந்து செகிஞ்சான் செல்லும் சாலையில் உள்ளன.
இரண்டிலும் புடிமானின் முகம் சாயத்தால் முழுக்க மூடப்பட்டிருந்தது.

























