இந்தியர்களின் வாக்குகள் இனியும் தேசிய முன்னணிக்கு கிடையாது

 

Hindraf People's Movement Logoகாலம்காலமாய் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டு நீரோடையில் மலேசியா இந்தியர்கள் ஆகிய நம்மை  ஓரங்கட்டிய தேசிய முன்னணியின்  செயல் கசப்பானது. ஒருமுறை பெரிய அளவில் ஏமார்ந்ததே  போதும். அதனிலும் கசப்பானது உலகறிய  தேசிய முன்னணி கட்சி-பிரதமர் நஜிப்பும் “ஹிண்ட்ராப்- தேசிய முன்னணி 5 ஆண்டு செயல் திட்டம்” புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்   கையெழுத்து போட்டு அதை இன்று வரை நடைமுறை படுத்தாமல் மௌனம் சாதிப்பது பெரிய நம்பிக்கை  துரோகமாகும்   என்று ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கதின் சபை உறுப்பினரான  பெ. ரமேஷ்  அனைவருக்கும் நினைவூட்டினார். ஒரு தடவை ஏமார்ந்தது போதும். இனியும் ஏமாற  முடியாது.

 

இந்த ஒப்பந்தம் தேசிய முன்னணி அரசாங்கத்தை இன் நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும்  பிரச்சனைகளுக்கு  ஒரு தெளிவான கொள்கையையும் நடவடிக்கைகளையும்  அமுல்படுத்த  கோரி இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் சாரங்கள் சில பின் வருமாறு:

 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி  ரி.ம. 3000 க்கு குறைவாக மாத வருமானம் பெருபவர்களின் வருமானத்தை  2018-2020க்குள் இரட்டிப்பாக உயர்த்த வேண்டும். குறிப்பாக, மலேசியா இந்தியர்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே ஆகும். ஆனால், இதுவரை இந்த விஷத்தை பற்றி எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கிடையாது. இந்த வர்கத்தினரை கருத்தில் கொண்டு இவர்களுக்கு என்று எந்த ஓர் ஆக்க பூர்வமான பொருளாதார முன்னேற்ற திட்டங்கள் இல்லை. மாறாக  அனைவருக்கும் பொதுவான  சாதாரண திட்டங்களே ஆங்காங்கே அரங்கேறி கொண்டு வருகிறது.

 

மேலும் கூறுகையில், “ஹிண்ட்ராப் – தேசிய முன்னணி 5 ஆண்டு செயல் திட்டதில்”  3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இந்தியர்களுக்கு என்று எந்த ஆக்க பூர்வமான திட்டங்கள் ஒன்றும் இதுவரை இல்லை.  இந்த ஒப்பந்தத்தை பற்றி எதுவும் பேசாமல் மௌனம் சாதிப்பது ஏன்? இது பிரதமர் நஜிப் மற்றும் பிஎன் அரசாங்கத்தின் ஏமாற்று வேலையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுவது இல்லாமல் வேறு என்ன ? எல்லாம் கடந்த 13-வது பொது தேர்தலுக்காக இவர்கள் போட்ட நாடகமே!  மிஞ்சி இருக்கும் 2 ஆண்டுகளில் ஒன்றும் நடக்க வில்லை என்றால், இதை அரசியல் சூழ்ச்சி என்றுதான் பொருள் கூற வேண்டும் என்றார்.

 

துண்டாடப்பட்ட தோட்டங்களில் இருந்து விரட்டியடிக்கபட்ட சுமார் ஒரு லட்சம்  இந்தியர்களுக்கு வீடமைப்பு திட்டம் பற்றி இதுவரை ஒரு பேச்சும் காணோம்.  இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக பிரதமரும் தேசிய முன்னணி அரசாங்கமும் ஒப்புக்கொண்டு அன்று கையெழுத்து போட்டது. ஆனால் இப்படிபட்ட நம்பிக்கை மோசடியை நினைத்து பார்கையில்  நெஞ்சம் குமறுவதாக  வேதனையோடு ரமேஷ் தெரிவித்தார்.

 

நாட்டில் ஆங்காங்கே  இடம்பெறும் கோவில் உடைப்புகள் நமக்கு மேலும் எரிச்சல் மூட்டுகிறது. இந்த நிலை இன்னும் மாறவே இல்லை.  எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஹிண்ட்ராப் – தேசிய முன்னணி 5 ஆண்டு செயல் திட்ட ஒப்பந்தமே உருவானது. ஆனால் பிரதமர் நஜிப் எதுவுமே நடக்காதது போல் முழு பூசனிக்காயை சோற்றில் போட்டு  மறைத்த கதையாக்கி  விட்டார். அப்படி ஒரு ஒப்பந்தம் இல்லாதது போலவே அவர் இருக்கிறார். அவர் மறந்தாலும், நாம் மறக்க இயலாது

 

இன்று வரை நம் நாட்டில் பிறப்பு பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாதவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு  போகுதே தவிர குறைந்த பாடில்லை. இதற்கு முறையான தீர்வு பிறந்ததாக ஒன்றும் தெரியவில்லை. நம் இந்தியர்கள் எதிர்நோக்கும்  பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணத்தை கண்டு ஆராய்வதில் தேசிய முன்னணி அரசாங்கம்  எந்த ஓர் உருப்படியான  முயற்சியும் செய்யவில்லை ஏதோ சிறப்பு குழு என்ற ஒன்றை நியமித்து  பிரச்சனைகளை  ஓரங்கட்ட பாடுபடுகிறது. அடுக்கடுக்காக பாரங்களை படிப்பறிவு குறைந்த நம் ஏழை இந்தியர்களிடம் கொடுத்து அவர்களை திக்குமுக்காட விடுகின்றனர்.

 

மேலும்   ஆவணங்கள் பல கேட்டு அவர்களை கதிகலங்க வைக்கின்றனர். பெரும்பாலோர் இதனாலே  அவர்களின் பிரச்சனைகளுக்குimage1 (4) தீர்வு காண முடியாமல் இன்றுவரை தவிக்கின்றனர்.  இப்படி நம்மவர்களை அல்லல் மற்றும் அலட்சியப்படுத்தும் தேசிய முன்னணி எப்படி இந்தியர்களின் ஆதரவை எதிர்பார்க்க முடியும் என்று ரமேஷ் வினவினார்.

 

நாட்டின் வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதியும் சரிந்துள்ளது.  உண்மையான புள்ளி விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. பிரதமர் அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று எலும்பு துண்டுகளை போட்டு இந்தியகளின் நலனில் அக்கறை உள்ள பிரதமர் என்ற நற்பெயரை  சம்பாதிக்க முயன்று கொண்டு இருக்கிறார்.

 

தேசிய முன்னணி அரசாங்கத்தின் மற்றுமொரு கண் துடைப்பு (செடிக்)  குழு. இதன் வழி நாட்டின் இந்திய அரசாங்கம்சாரா அமைப்புகளுக்கு  பணம் ஒதுக்கீடு கொடுத்து நீரந்தர தீர்வு என்ற  மாயையை உருவாக்கி,  இதன் வழி இந்தியர்கள் தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதும் பிரதமர் நஜிப் மீதும்  இழந்த நம்பிக்கையை  புதுபிக்க முயல்கின்றனர்.  இவை யாவும் அரசியல் தந்திரங்களே.

 

கடந்த காலங்களில் தேசிய முன்னணி  அரசாங்கத்தால் நன்மை விளையும் என்று  நம்பிக்கியையோடு நம்மவர்கள் வாக்களித்தார்கள். மறுபடியும், மறுபடியும் நம்பர்வர்களின் நம்பிக்கை பொய் என்று தேசிய முன்னணி அரசாங்கம் நிருபித்து  கொண்டுதான் வருகிறது.

 

ஹிண்ட்ராப் – தேசிய முன்னணி 5 ஆண்டு செயல் திட்ட ஒப்பந்தமோ  இந்நாட்டு இந்தியர்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் மற்றும்  பொருளாதார  பிரச்சனைகளுக்கு ஒரு  நிரந்தர தீர்வு என்று கருதப்பட்டது.. ஆனால் இன்று தேசிய முன்னணி அமல்படுத்தி வரும் திட்டங்கள் எல்லாம் ஒரு மேலோட்டமான திட்டங்களாகவே இருக்கின்றன.. நம்வர்களின் வாக்குளை குறிவைப்பதிலே தேசிய முன்னணி  இலக்காக உள்ளது.  தேசிய முன்னணி நடத்தும் நாடகத்தை எல்லாம்  புரிந்து ஒரு தெளிவான முடிவுக்கு நாம் வரவேண்டும். தேசிய முன்னணிக்கு ஒரு பாடம் கற்று கொடுத்தாக வேண்டும். துரோகிகளுக்கு கருணை காட்ட கூடாது.

 

ஆகவே, ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் அனைத்து சுங்கை புசார் மற்றும் கோலாகங்சார்   இந்திய வாக்காளர்கயும்  விழிப்பு நிலையில் இருக்குமாறு கேட்டு கொள்கிறது என்றார் ரமேஷ்.

 

பல தலைமுறைகளாக நம்மை அல்லல்படுத்திவரும்  தேசிய முன்னணி அரசாங்கத்தை புறக்கணிப்போம்.  இல்லையேல், சிறுபான்மை எண்ணிகையைக் கொண்ட நாம் நாட்டின்  பொருளாதார   வளர்ச்சி  நீரோடையில் தத்தளித்து காணமல் போய் விடுவோம் என்று ரமேஷ் வழியுறுத்தினார் .