அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல், மா கூறுகிறார்

 

mahsays1சரவாக் மாநிலத் தேர்தல் மற்றும் இம்மாதம் நடைபெற்ற இரண்டு இடைத் தேர்தல்கள் ஆகியவற்றில் பாரிசான் பெரும் வெற்றி பெற்றததைத் தொடர்ந்து மலேசியாவின் 14 ஆவது பொதுத் தேர்தல் 2017 ஆண்டில் நடைபெறும் என்று கெராக்கான் கட்சியின் தலைவர் மா சியு கியோங் ஆருடம் கூறினர்.

இதற்கு காரணம் பாரிசானுக்கான மக்களின் ஆதரவு அதிகரித்திருப்பதாகும். அது முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு அனுகூலமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் சீன வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்தனர் என்று பரவலகக் கருதப்படுகிறது. ஆனால், அவர்கள் இப்போது பிஎன் பக்கம் திரும்பியுள்ளனர். ஆகவே, நாம் 2018 ஆம் ஆண்டு வரையில் காத்திருக்க வேண்டியதில்லை என்றாரவர்.

“அவர்கள் (சீன வாக்காளர்கள்) திரும்பி வருகிறார்கள் என்று நான் நினக்கிறேன். ஆனால், நாம் பலவற்றை செய்ய வேண்டியுள்ளது”, என்று மா மேலும் கூறினார்.