சிங்கப்பூர் காமெடியன் ஃபாக்கா ஃபஸ் தாம் வேடிக்கையாக பேசுகையில் பிரதமர் நஜிப்பை ஒரு திருடனுக்கு ஒப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தாம் யாரையும் எதற்காகவும் குற்றம் சாட்டவில்லை என்று கூறிய அவர், தாம் வெறுமனே தற்போதைய சம்பவங்கள் குறித்து கேலியாக பேசியதாக கூறினார்.
ஆனால், அவரது அறிக்கை சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேச அம்னோ இளைஞர்களை சாந்தப்படுத்தவில்லை. அவர்கள் அந்த காமெடியனை இப்போது மலேசியாவுக்கு வருவதிலிருந்து தடை செய்ய வேண்டும் என்கின்றனர்.
இப்போது வைரலாகி விட்ட அந்த வீடியோ கிளிப்பில் ஃபாக்கா கூறுகிறார்: சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் ஒரு திருடனை “பெஞ்சூரி” என்று அழைக்கையில் மலேசிய மலாய்க்காரர்கள் ஒரு திருடனை “பெர்டான மந்திரி” என்று அழைக்கின்றனர்.
நான் கேட்டதைத்தான் சொல்கிறேன். இந்த மனிதர் இந்தக் குற்றத்தை புரிந்தார் என்று கூறவில்லை, இல்லவே இல்லை. நான் கூறியதை மாற்றிவிட வேண்டாம். நான் யாரைப் பற்றியும் அவதூறு கூற கிளம்பவில்லை என்றாரவர்.
உள்ளதை சொல்வோன். நன்றி.
சரியதாசன் சொல்லலை இருக்கிறான் என் பக்கத்து வீட்டு