ஐஎஸ் பயங்கரவாதிகள் உருவாகக் காரணமானவர்களே இப்போது பயங்கரவாதக் கும்பல்களோடு சேராதீர்கள் என்று அறிவுரை கூறுகிறார்கள் எனச் சமூக ஆர்வலர் மரினா மகாதிர் சாடினார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் மகளான மரினா டிவிட்டரில் இவ்வாறு கூறினார்.
ஐஎஸ்ஸில் சேராதிருத்தல் என்பது ஆயுதம் ஏந்தாமலிருப்பது மட்டுமல்ல. ஐஎஸ் தீவிரவாதிகள்போல் சிந்திக்காமல் இருப்பதும் அதில் அடங்கும் என்றாரவர்.
“நிறைய பேர் வன்முறையை நாடாதிருக்கலாம். ஆனால் ஐஎஸ் போன்றுதான் சிந்திக்கிறார்கள்.
“அதனால்தான் அரசியல்வாதிகளும் உலாமாக்களும் ‘ஐஎஸ்ஸில் சேராதீர்’ என்று கூறுவதைக் கேட்கும்போது ‘வாயை மூடுங்கள், அவர்கள் உருவாக உதவியவர்களே நீங்கள்தானே’ என்று கூவ வேண்டும்போல தோன்றுகிறது”, என்று மரினா குறிப்பிட்டார்.
சரியாக சொன்னடி அதில் 1 MDB நாயகனுக்கும் உன் அப்பனுக்கும் பெரும் panggundu
சாத்தியம் ! இது சத்தியம் !! எல்லாம் வல்ல இறைவனின் ஆணை , சொல்லியது யாவும் உண்மை இது சத்தியம் !!!
மெரினா உனது அப்பனும் அதற்கு துணைப் போனவர்தான். நாட்டில் இன வேற்றுமை மிகுதியானதே உமது அப்பா ஆட்சி காலத்தில்தான்.
நமது அண்டை நாடுகளில் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதும் நமது நாட்டு அரசியல்வாதிகளும் உலாமாக்களும்தானோ ?
மதத்தீவிரவாதம் ஒழியவேண்டும் எனில் சிறுவயதுமுதலே சிறுவர்களிடேயே மத நல்லிணக்கம் வலியுறுத்தப்பட வேண்டும் ,சிறுவயது முதலே இறைவன் ஒருவனே .ஆனால் வழிபடும் முறைதான் வேறு என்பது தெளிவாக விளக்கப்படவேண்டும்.மனிதர்கள் யாவரும் சமம் என்பது அந்த பிஞ்சு மனங்களில் ஆழப்பதிக்கப்பட வேண்டும் ,இது உலக ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் இன்றி அமையாதது
மெரினா நீ என்ன சொன்னாலும் ஒன்றும் நடக்காது. உனக்கு உண்மையும் தெரியும் ஆனால் அதிகம் பேசினால் உனக்கு என்ன நடக்கும் என்றும் தெரியும். எல்லாம் உன் ஆண்டவனின் கையில்.