ஏர் ஏசியா 100 ஏர் பஸ் விமானங்களை வாங்குகிறது

airஐரோப்பிய    விமானத்   தயாரிப்பு   நிறுவனமான  ஏர்  பஸ்  நிறுவனத்திடமிருந்து     மலேசியாவின்   பட்ஜெட்  விமான  நிறுவனமான  ஏர்  ஏசியா  100  ஏ321நியோ  ரக  விமானங்களை  வாங்குகிறது.

இந்த  வகை  விமானங்களில்  240 பயணிகள்  பயணம்  செய்யலாம்.

ஏ321நியோ  ரக  விமானங்கள்   ஆசியாவின்  மிகப்  பெரிய  சிக்கன  விமான  நிறுவனமான  ஏர்  ஏசியா  அதிகரித்துவரும்    தேவையைச்  சமாளிக்கவும்  “செலவுகளைக்  குறைக்கவும்”  உதவும்   என  ஏர்  ஏசியா   குழுமத்   தலைவர்   டோனி  பெர்னாண்டஸ்   தெரிவித்தார்.

அது  கூடுதல்  பயணிகளை   ஏற்றிச்செல்ல  உதவும்   என்றாரவர்.