பேங்க் நெகாராவின் வீட்டுக் கடன் கொள்கைகளில் தளர்வு தேவை- சிலாங்கூர் எம்பி

coopசிலாங்கூர்    மந்திரி   புசார்  அஸ்மின்  அலி,   பேங்க்  நெகாரா  அதன்   கடுமையான   வீட்டுக்   கடன்  கொள்கைகளை    மறுமதிப்பீடு   செய்ய  வேண்டும்  எனக்   கேட்டுக்  கொண்டார்.

சிலாங்கூர்கூ   திட்டத்தில்   வீடுகள்  கிடைக்கப்  பெற்றோர்   அவற்றுக்கு  வங்கிக்   கடன்    பெற   முடியவில்லை   என   மாநில   அரசிடம்  புகார்   செய்திருப்பதை    அடுத்து   பிகேஆர்  துணைத்   தலைவர்   அவ்வாறு   கோரிக்கை  விடுத்தார்.

கடனளிப்பில்   முதல்  முறையாக  வீடு   வாங்குவோருக்கு  முன்னுரிமை  கொடுப்பது   முக்கியம்.  அப்போதுதான்   அவர்களால்   கட்டுப்படி- விலை  வீடுகளை  வாங்க  முடியும்.

“வங்கிகளிடமிருந்து    அவர்களுக்குக்  கடன்  கிடைக்கவில்லை  என்றால்  சொத்துத்  துறை  பாதிப்புறும்”,  என்று  அஸ்மின்   கூறினார்.