சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் அவரது வழக்குக் கருத்துரைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
வழக்குக் குறித்துக் கருத்துரைக்க வேண்டாம் என ஊடகங்கள் மூலமாகவும் அவரின் வழக்குரைஞர்களின் மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டும்கூட டிஏபி தலைமைச் செயலாளர் தொடர்ந்து கருத்துரைப்பதால் இதுவே அவருக்குக் கடைசி எச்சரிக்கையாகும் என அபாண்டி கூறினார்.
“ஆகக் கடைசியாக அவர் தெரிவித்த கருத்துகள் அரசாங்க வழக்குரைஞரான என் நேர்மையைத் தாக்குவதாக உள்ளது.
“என் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் இப்படிப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு எதிராக நான் என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
“என்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் அரசுத் தரப்பிடம் உள்ள அவருக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட வேண்டி நேரலாம்”, என அபாண்டி ஓர் அறிக்கையில் கூறினார்.
லிம்முக்கு எதிராக வழக்கை நடத்தும் அரசுத்தரப்பு வழக்குரைஞர்களுக்குத் தலைமையேற்கும் அபாண்டி, அவருக்கு எதிரான ஆதாரங்கள் எல்லாம் பெரும்பாலும் ஆவண வடிவில் தம் வசமுள்ளதாக தெரிவித்தார்.
மிரட்ட வேண்டாம் , அது ஒன்றும் தப்பில்லை , லிம் குற்றம் சாட்டப்பட்டவர். அவரது நியாத்தை பொது மக்களுக்கு தெரிவிப்பதில் அவருக்கு உரிமை உண்டு.
உங்கள் நேர்மை கேள்விக்குள்ளாகிறதா! அப்படியும் ஒன்று உள்ளதோ!
அதிகாரம் ஆட்டம் போடுது. இதற்க்கு எல்லாம் அம்னோ குண்டர்களின் ஆதரவு பலம் காரணம்.