பினாங்கில் திடீர் தேர்தல் நடத்த பிகேஆர் உடன்பட வேண்டும், அதற்காக டிஏபி காத்திருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
அக்கட்சிகளிடையே ஒரு கருத்திணக்கம் காணப்பட்டதும் திடீர் தேர்தல் பற்றி அறிவிக்கப்படும் என செய்தியாளர்களிடம் லிம் தெரிவித்தார்.
“டிஏபி திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறது.
“நான் ஏற்கனவே கூறியதுபோல் அது லிம் குவான் எங்கைக் காப்பாற்றுவதற்காக அல்ல, லிம் குவான் எங்கைக் காப்பாற்ற முடியாது.
“ஆனால், அது மலேசியாவைக் காப்பாற்ற, பினாங்கைக் காப்பாற்ற”, என்றாரவர்.
ஊழல் குற்றச்சாட்டின்கீழ் தாம் “சிறை செல்வது” உறுதி என்று ஊகம் தெரிவித்த பினாங்கு முதல் அமைச்சர், அதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றார்.
1எம்டிபி விவகாரம் தலைதூக்கி இருப்பதைக் கருத்தில் கொண்டால் பொதுத் தேர்தலையே நடத்தலாம் என்றாரவர்.