ஷாரிஸாட், மலேசியர்கள் மதியற்ற மாடுகள் அல்ல

 

notcowsவனிதா அம்னோ தலைவர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில் 1எம்டிபி விவகாரத்தில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள சொத்து பறிமுதல் வழக்குகள் அந்நியர்களின் குறிக்கிடுதல் என்று கூறியிருந்ததற்கு முன்னாள் பிரதமர் மகாதிரின் வழக்குரைஞர்களில் ஒருவர் மலேசியர்கள் மாடுகளைப் போல் மதியற்றவர்கள் அல்ல என்று எதிர்வினையாற்றினர்.

அமெரிக்க நீதித்துறையின் சொத்து பறிமுதல் வழக்குகள் பற்றிய ஆவணங்களுக்கும் நமது அன்புக்குரிய நாட்டின் உள்விவகாரங்களில் அந்நியர்கள் குறிக்கிடுதலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஹனிப் காட்ரி அப்துல்லா அவரது முகநூலில் இன்று பதிவு செய்துள்ளார்.

உண்மையில், அவை நமது மோசடிக்காரர்கள் அந்நியர்களின் சட்டங்கள் மற்றும் விதிகளுடன் குறிக்கீடு செய்ததின் விளைவாகும் என்றாரவர்.

ஆகவே, மலேசிய மக்களாகிய நாங்கள் மாடுகளைப்போல் மதியற்றவர்கள் என்று நினைக்க எத்தனிக்க வேண்டாம். உண்மையான மாடுகளுக்குக்கூட இன்னேரம் நடந்தது என்ன என்று தெரிந்திருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.