பிரதமர் நஜிப் அப்துல் சராக், 1எம்டிபி தொடர்பில் அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள சிவில் வழக்குகள் குறித்து மக்கள் மனம்போன போக்கில் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்தினார்.
அதை அரசாங்கம் கடுமையான விவகாரமாகக் கருதுகிறது என்று கூறிய பிரதமர் அவ்வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.
அதற்கிடையில், மக்கள் மனம்போன போக்கில் பேசிக் கொண்டிருக்கக் கூடாது .
“விரைவில் அல்லது காலம் தாழ்த்தி உண்மை தெரிய வரும்.
“சட்டம் அதன் வேலையைச் செய்ய நாம் இடமளிக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு. நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்”. புத்ரா ஜெயா, துங்கு மிசான் சைனல் அபிடின் பள்ளிவாசலில் ஹஜ்ஜு யாத்திரை செல்லவிருக்கும் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் நஜிப் இவ்வாறு கூறினார்.
இறுதியில் உண்மை தெரிந்து என்ன செய்வது,நாட்டு கடன் சுமையை சுமந்துக்கொண்டிருப்பது பொதுமக்கள்தானே,அமெரிக்க காரர்கள் வீண் பழி சுமத்துகிறார்களாம்,அவர்களை hasutan,அல்லது புதியதாக ஏதாவது ஒரு சட்டம் உருவாக்கி, அவர்களை பிடித்து சிறைவைக்கலாமே !
நீங்கள் சொல்வது உண்மை என்றுமே உண்மைக்கு அழிவு இல்லை கண்டிப்பாக இறுதியில் வெளிவரும் அதான் உண்மை .
உண்மை இறுதியில் வெளிவந்தால் கல்லறையிலேதான் எழுதி வைக்கலாம். நடவடிக்கை எடுக்க முடியாதே !