மலாக்கா இராணுவ முகாமுக்குள் புகுந்த குரங்குக் கூட்டம் ஒன்று இராணுவத்தின் இரகசிய ஆவணங்கள் சிலவற்றைத் திருடிச் சென்றதாம்.
திரெண்டாக் முகாமில் அஞ்சல்காரர் ஒருவர் கடிதங்களைப் பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது அவரைத் தாக்கிய குரங்குக் கூட்டம் அவரிடமிருந்த மூன்று இரகசிய ஆவணங்களைப் பறித்துச் சென்றதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.
சில வினாடிகளில் தாக்குதல் நடந்து முடிந்து விட்டது. அச்சம்பவத்தில் 33-வயது அஞ்சல்காரர் சொற்ப காயங்களுக்கு ஆளானார்.
இரண்டு நாள்களுக்குமுன் நடந்த அச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இப்போது நீண்ட வால் கொண்ட அந்த மகாக் வகை குரங்குகளைத் தேடிக் கொண்டிருக்கிறது.
இப்படி நடப்பது முதல்முறை அல்ல. 18 மாதங்களுக்குமுன் ஒரு படைவீரரின் காரை உடைத்து உள்ளே புகுந்த குரங்குகள் அவர் வைத்திருந்த பணம், ஏடிஎம் அட்டை, காரோட்டும் உரிமம், ஸ்கூபா உடைகள் எல்லாவற்றையும் அள்ளிச் சென்று விட்டனவாம்.
பரவாயில்லை! நமது நாட்டுக்குரங்களுக்குக் கூட இராணுவ இரகசியங்கள் என்றால் என்ன வென்று தெரிந்திருக்கிறதே!
மலேசியாவில் மடையர்களின் ஆட்சியில் இதுபோன்று நடப்பது வியப்பளிக்கவில்லை.அவர்கள் சொல்வதைக்கேட்டு ஆமாம் சாமி போட வேண்டியதுதான்.
நல்ல காமெடி.
மனித குரங்காக இருக்கின்ற போகிறது…?
நம் நாட்டு ஆட்சியாளர்களை விட குரங்குகளுக்கு மூளை சற்று அதிகம் போல் தோன்றுகிறது.
ஜெட் எஞ்சின் காணாமல் போனதை விட இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல !!!!!!!!!!
நல்ல சேதி அந்த குரங்குகலாய் பாராட்ட வேண்டும். கவனமாக ரகசிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளன. அதை அவை அமெரிக்கவிஇட்கு அனுப்பாமல் இருந்தால் போதும்.
ஆம் ..நமது நாட்டில் மட்டும்தான் இப்படி பட்ட குரங்குகள் இருக்கு….ஒரு வேலை இந்த குரங்குகள் தான் 1MDB சம்பந்தமான பத்திரங்களை அமெரிக்காவுக்கு கொடுத்திருக்குமோ …….
IS குரங்குகளென்றால் விரைவில் அங்குமிங்கும் குண்டுகள் வெடிக்கும்…எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது!