தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி)ச் சட்டம் நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு உள்பட்டது என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்கிறார் சுதந்திரத்துக்கான வழக்குரைஞர் அமைப்பின் செயல்முறை இயக்குனர் எரிக் பால்சன்.
“அதிகாரம் பிரதமருக்குத்தான். பிரகடனம் செய்யப்பட்ட பிறகு அது நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்படுகிறது.
“எனவே, நாடாளுமன்றத்துக்குக் கண்காணிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றோ பாதுகாப்புப் பகுதியாக பிரகடனம் செய்யப்படுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்றோ கூறுவது சரியாகாது”, என பால்சன் டிவிட்டரில் கூறினார்.
பிரகடனம் செய்யப்பட்டத்தை அரசாங்கத் தலைவர் இயன்ற விரைவில் நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றுதான் சட்டம் கூறுகிறது.
நாடாளுமன்றம் பாதுகாப்புப் பகுதியாக செய்யப்பட்ட பிரகடனத்தை மாற்றலாம் என்றும் என்எஸ்சி சட்டம் தெரிவிக்கிறது.
நாடாளுமன்றமா? அப்படி ஏதாவது இந்த நாட்டில் உள்ளதா? அந்த சட்டத்தை இயற்றியது எந்த நாடாளுமன்றம்? 51 முட்டாள்கள் சேர்ந்து 49 அறிவாளிகளை முட்டாளாக்கும் நாடாளுமன்றமா?