அம்னோவைக் குறைகூறிய கிஜால் சட்டமன்ற உறுப்பினர் அஹமட் சைட் கட்சிநீக்கம் செய்யப்படும் சாத்தியம் இருப்பதால் திரெங்கானுவில் திடீர் தேர்தல் நடக்கலாம்.
திரெங்கானு சட்டமன்றத்தில் பிஎன்னுக்கு 17 இடங்கள். பாஸ் கட்சிக்கு 14. பிகேஆருக்கு ஒரே ஒர் இடம்.
அஹமட் சைட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அவர் எதிரணியில் சேர்ந்து கொண்டால் அது தொங்கு சட்டமன்றமாகி விடும். அப்படி நடந்தால் திடீர் தேர்தல் தவிர்க்க முடியாததாகி விடும்.
அஹமட் சைட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பைக் கட்சியிடமே விட்டு விடுவதாக திரெங்கானு மந்திரி புசார் அஹமட் ரசிப் அப்துல் ரஹ்மான் நேற்று தெரிவித்தார்.
“கட்சி ஒழுங்கு விதிகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம்…. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நானே தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றார்.