பெர்சே பேரணி நடப்பது உறுதி

bersihதேர்தல்   சீரமைப்புக்காக   போராடும்   பெர்சே 2.0,   ஐந்தாவது    தடவையாக   பேரணி   நடத்தப்   போகிறது.  இம்முறை   1எம்டிபி    வழக்கின்மீது   மேல்நடவடிக்கை    எடுக்க   வேண்டும்   என்ற  கோரிக்கையை   வலியுறுத்தி    அது  பேரணி    நடத்தும்.

இன்று   பெட்டாலிங்   ஜெயாவில்,   பெர்சே  அலுவலகத்தில்    செய்தியாளர்   கூட்டமொன்றில்  பேசிய   பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லா,   1எம்டிபி –  தொடர்புள்ள   பல  பில்லியன்  பெறுமதியுள்ள  சொத்துக்களைப்  பறிமுதல்  செய்ய    அமெரிக்க    நீதித்   துறை    வழக்கு   தொடுத்துள்ளதை    அடுத்து  பேரணி    நடத்தாமலிருக்க   முடியாது    என்றார்.

“பொறுப்புடமையும்    நடவடிக்கையும்   தேவை  என்பதை  வலியுறுத்த   பெர்சே  பேரணிக்கு    ஏற்பாடு   செய்து   வருகிறோம்.

“பெர்சே  பேரணி-5   பற்றிய    விவரங்கள்     உரிய  நேரத்தில்   தெரிவிக்கப்படும்”,  என்றாரவர்.