திரெங்கானுவில் திடீர் தேர்தலா? தெரியாது என்கிறார் அஹமட் சைட்

snapதிரெங்கானுவில்   திடீர்   தேர்தல்   நடத்தப்படுவது   பற்றித்   தமக்கு   எதுவும்   தெரியாது   என்று    கூறிய  கிஜால்   சட்டமன்ற    உறுப்பினர்   அஹமட்  சைட்,   திடீர்  தேர்தல்   நடத்த     மந்திரி  புசார்   ரசிப்   அப்துல்  ரஹ்மான்  திரெங்கானு  சுல்தானின்   அனுமதியைப்  பெற   வேண்டும்  என்றார்.

“எனக்கு    அது   பற்றித்   தெரியாது.   ஆனால்,  திடீர்   தேர்தல்   நடத்த  போதுமான    ஆதரவு  இருப்பதாக   எம்பி   நினைத்தால்   அவர்  சுல்தானைச்  சென்று  காண  வேண்டும்.

“மாநில  ஆட்சியாளர்   திடீர்   தேர்தலுக்கு   ஒத்துக்கொள்ளவில்லை   என்றால்   அவரும்   ஆட்சிக்குழுவும்  பதவி  விலகி   புதிய  எம்பி  ஒருவர்  நியமிக்கப்பட   வேண்டும்.”,  என  அஹமட்  சைட்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

திரெங்கானுவின்   முன்னாள்  மந்திரி  புசாரான   அஹமட்  சைட்,    அம்மாநிலத்தில்  இரண்டு  வகை  நிலவரங்கள்  உருவாகலாம்    என்று  எதிர்பார்க்கிறார்.

“தொங்கு   சட்டமன்றம்  என்றால்  திடீர்   தேர்தல்   நடத்த   வேண்டியிருக்கும்.

“ஆனால்,  அம்னோ  சட்டமன்ற  உறுப்பினர்கள்   இருவர்  அக்கட்சியிலிருந்து   விலகி    எதிரணியில்  சேர்ந்தார்களானால்   எதிரணிதான்  அடுத்த  மாநில   அரசை   அமைக்கும்”,  என்றார்.