டான்ஸ்ரீ மூவர் மீதான புகார் ஒன்றும் லேசுபட்ட புகார் அல்லவே: ஐஜிபிக்கு அறிவுறுத்து

tansriபிரதமரைக்  கவிழ்க்க    சதி  நடப்பதாக    அம்னோ   இளைஞர்    உதவித்   தலைவர்   அஸ்வான்   ஹருன்   செய்த   புகார்மீது    நடவடிக்கை  எடுப்பதில்லை   என்ற   போலீசாரின்    முடிவு   பாஸ்   உதவித்   தலைவர்   இட்ரிஸ் அஹ்மட்டுக்குப்  புரியாத  புதிராக  இருக்கிறது.

அச்சதித்     திட்டத்தில்   பேங்க்   நெகரா   முன்னாள்   ஆளுனர்     ஸெட்டி   அக்தார்   அசிஸ்,   மலேசிய    ஊழல்தடுப்பு    ஆணைய    முன்னாள்   தலைவர்    அபு   காசிம்   முகம்மட்,    முன்னாள்    சட்டத்துறைத்   தலைவர்    அப்துல்  கனி  பட்டேல்    ஆகிய   மூவருக்கும்  பங்குண்டு   என  அப்புகாரில்   குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

“இது  ஓன்றும்   கோழி  முட்டையைக்  காணோம்,  காரைக்  காணோம்  என்பது   போன்ற  புகார்   அல்ல.

“இது   நாட்டின்   பாதுகாப்புப்   பற்றியது   இறையாண்மை   பற்றியது.   அம்முவரும்    அவை   தொடர்பான    தகவல்களை    அமெரிக்க   நிறுவனங்களுக்குத்   தெரிவித்திருப்பதாகக்   குற்றஞ்சாட்டப்படுள்ளது”, என  இட்ரிஸ்    முகநூலில்  பதிவிட்டிருந்தார்.

செவ்வாய்க்கிழமை  அவ்விவகாரம்   பற்றிக்   கருத்துரைத்த   போலீஸ்    படைத்   தலைவர்   காலிட்  அபு  பக்கார்,     அம்னோ  இளைஞர்    தலைவரின்   புகார்    அனுமானத்தின்   அடிப்படையில்   செய்யப்பட்ட  ப்கார்  என்பதால்    அதன்மீது    நடவடிக்கை   எடுக்கப்படாது  என்று    அறிவித்திருந்தார்.

மேலும்,  ஒரு  பொய்யான   புகார்  செய்ததற்காக    கைருல்    அஸ்வான்மீதும்     விசாரணை   செய்யப்போவதில்லை   என்றும்  காலிட்  கூறினார்.
“ஏன்  அப்புகார்மீதான  விசாரணை    நிறுத்தப்பட்டது?  கைருல்  அம்னோ   இளைஞர்  பகுதி   உதவித்   தலைவர்  என்பதினாலா?  அல்லது,  இரகசியங்கள்   வெளியாகி  விடும்   என்ற  பயமா?”,  என  இட்ரிஸ்   வினவினார்.