அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களான அஹ்மட் சைட்டும் கசாலி தயிப்பும் அக்கட்சியிலிருந்து விலக விரும்பினால் உடனே முடிவு செய்தாக வேண்டும், மாநிலத்தில் குழப்படி செய்து கொண்டிருக்கக் கூடாது என திரெங்கானு பாஸ் கூறியது.
அவ்விருவரும் அம்னோவிலிருந்து வெளியேறினால்தான் சட்டமன்றத்தில் எதிரணிக்குப் பெரும்பான்மை கூடியுள்ளதா என்பதை திரெங்கானு சுல்தானால் தீர்மானிக்க முடியும் என மாநில பாஸ் ஆணையர் சதிபுல் பஹாரி மமாட் கூறினார்.
“ அஹ்மடும் கசாலியும் வெளியேற விரும்புவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
“அவர்கள் விரைவில் முடிவு செய்தாக வேண்டும். காலம் கடத்திக் கொண்டிருப்பது மாநிலத்துக்கும் மக்களுக்கும் நல்லதல்ல”, என சதிபுல் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அவ்விருவரும் விலகி வந்தால் பாஸ் பிகேஆருடன் சேர்ந்து திரெங்கானுவில் ஆட்சி அமைக்க தயாராகவுள்ளது என்றாரவர்.