முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் “கிள்ளிங்” என்று கூறுவதைக் காண்பிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் குறிப்பாக வாட்ஸ்எப்பில் வேகமாக பரவி வருகிறது.
மஇகாவின் 70ஆம் ஆண்டுநிறைவு விருந்து இன்றிரவு நடைபெறவுள்ள வேளையில் அக்காணொளி வெளிவந்துள்ளது. அதை அக்கட்சி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தற்காத்துப் பேச ஓர் ஆயுதமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடும்.
அக்காணொளி, மே மாதம் லங்காவியில் ‘மலேசியாவைப் பாதுகாப்போம்’ இயக்கத்தின் நிகழ்ச்சி ஒன்றின்போது பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அதில் கலந்துகொண்டு பேசிய மகாதிர் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க நஜிப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கேலி செய்தபோது “கிள்ளிங்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
எல்லாரும் சொல்லிவிட்டார்கள் -இவனும் இவன் பங்கை செலுத்திவிட்டான். துன் சம்பந்தனுக்கு முன்னோக்கு அறிவு இருந்திருக்க வேண்டும். துன்குவை நம்பி நம் உரிமைகளை தாரை வார்த்து நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியது சம்பந்தனே. பிறகு வந்த தலைகள் எலும்பு துண்டுக்காக நம்மை நிரந்தர அடிமைகளாக்கி ஓரங்கட்டி விட்டான்கள்- தற்போது நம்பிக்கை நாயகனுக்கு ஆதரவு கொடுத்து சாதித்து விட நினைத்து நம் தலை மேல் மண்ணை வாரி போட்டாகிவிட்டது.
அட பாவிகளா…மகாதிர் சொன்னது Killing எனும் வார்த்தையா கெலிங் என்றா? சரி…அதுக்கும் மஇகாவின் 70ஆம் ஆண்டுநிறைவு விருந்துக்கும் என்ன சம்மந்தம்?
‘அம்னோ சாலக்கா’ என்று இயக்கத்தை சொன்னதற்காக ஆர்ப்பாட்டம் செய்ததோடு , வழக்கும் தொடுத்து, வெற்றி பெறமுடியாமல் மண்ணை கவ்விய கல்வி ஒய்வு இல்லாத இனமாக இல்லாமல், நமது இயக்கங்கள் ஒன்றுக்கூடி நன்கு சிந்தித்து செயலில் இறங்கி , சொன்னது தவறாக இருப்பின் சொன்னவர் மீது நடவடிக்கையோ அல்லது இந்தியர் என்ற நமது ஒற்றுமையை வரும் தேர்தலில் தெளிவுபடுத்திட வேண்டும் .
மாக தியரை மகா தீரர் என்று மண்டைக்கு மேல் தூக்கி ஆடிய கூட்டம் தானே அந்த கூட்டம்.
இந்தியர்களே, தயவு செய்து கெலிங் என்று மற்றவர் நம்மை இகழ்ந்தால் கோபம் அடையாதீர்கள். அது நம்மை குறிக்கும் சொலால என்று கூறுங்கள். மேலும் ஏன் உங்கள் மத அன்பர்களை நீங்களே கேலி செய்கிறீர்கள் என்று கூறுங்கள். யாம் மற்ற மதத்தினரிடம் இவாறு தான் கூறுகிறேன். அதன் பிறகு அவர்கள் இவ்வார்த்தையை உபயோகிப்பது இல்லை. இல்லாத ஒன்றுக்கு நாம் கோபம் படாமல் சாதுரியமாக முறையில் கையாள்வதே சிறப்பு.
இன்று ம.இ.கா கோழி ஒன்னு கூவியிருக்கு…மகாதீர் மன்னிப்புக் கேட்க வேண்டுமாம். அவன் இப்ப பல் பிடுங்கிய பாம்பு எனவே கோழியெல்லாம் கூவ ஆரம்பிச்சிடுச்சி…இவன் இன்னும் பதவியில் இருந்தா இதெல்லாம் லுங்கிக்குள்ள புகுந்திருக்கும்…அது சரி…இதை விட கேவலமா…நம்மை நம் மதத்தை நம் இனத்தை காறித் துப்பிய போது எங்கே போயிருந்தீங்க..? அப்பவே எதிர்த்து நின்னிருந்தா இதெல்லாம் இன்னைக்கு வருமா? நாம தான் கன்னத்தில் அறைந்த கையக் கூட முத்தம் கொடுக்கற இனமாச்சே…இனி கிளிங் என்று சொல்பவனை தேச துரோகச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் போடுங்க..முடியுமா? முடியாதில்லே…? போய் அடுப்பங்கரைய கவனிங்க…சோறு பொங்குது..
மகாதீர் “மாமா” என்பதை அனைவரும் அறிவர் ஆனால் மலாய்க்காரன் கூறி கொள்வதால் மாமாவும் இல்லை மலாய்க்காரனும் இல்லை என்றாகி விட்டது.
அதேபோல் நம் நாட்டில் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்களும் இந்துவாகவும் இல்லை மலாய்க்காரனாகவும் இல்லை,
இப்படி இரண்டும் கெட்டான் நிலையில் வாழ்பவர்கள்தான் இந்த “KELING” என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர்கள்.
அன்று தலைவன் இன்று எதிரி.அன்று தமிழர்களை இந்த காக்காதீர் ஒடுக்கியபொழுது எங்கே போனது உங்கள் தன்மானம்? கூஜா தூக்குவதும் உரிமை இழக்க செய்வதுதான் உங்கள் வேலை. இது தான் மலேசியா இந்தியன் காங்கிரஸ் செயல்பாடு. மக்கள் தெளிவாக இருப்பதுதான் நமது எதிர்காலம்.
தென்னிந்திய தொழிலாளர் நிதி களைத்து அந்த வாரியத்தின் நிலத்தை அபகரித்தது,தமிழன் விளையாட்டு அரங்கத்தை அபகரித்தது,அரசு வேலை வாய்ப்பு நிராகரிப்பு,இனவாதம் இவை அனைத்தும் காக்காதீர் ஆட்சியில் நடந்தபொழுது தூங்கிய இந்த நாதேரி மலேசியா இந்தியன் காங்கிரஸ் பெருச்சாளிகள் இன்று வீர வசனம் பேசுது.
ஸ்ரீகர முதல்வன் நீங்கள் கூறுவதுபோல் இந்த ““KELING”என்கிற வார்த்தை மகாதீருக்கும் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுபவனுக்கும் கனகச்சிதமாக பொருந்தும்.
மகாதீரீன் BAHASA BAKU என்று கேள்வி பட்டிருப்பீர்கள் இந்த BAHASA BAKUவுக்கு அந்த காலத்திலே மலாய்க்காரன் BAHASA ANAK KELING UTARA என கேலி செய்தான் இதை இன்னும் மறக்காமல் இருக்கும் மகாதீரை இனி நாம் (BAHASA என்ற வார்த்தையை நீக்கி விட்டு) ANAK KELING UTARA என்றே அழைக்கலாம் தப்பில்லை
ஐயா seliyan அவர்களே– நாம் என்ன கூறினாலும் நம்மவர்களில் பெரும்பாலோர் பெருச்சாளிகளாகவே இருக்கின்றனர் போலும். துங்கு காலத்திலேயே நம்மை ஓரங்கட்ட ஆரம்பித்து விட்டனர். இப்போது நாம் இந்தொக்களை (indo ) விட கேவலம். இதுதான் இன்றைய நிலை– ஆனால் நம்மவர்களில் பெரும்பாலோர் இன்றும் தலையை மண்ணில் புதைத்து வைத்திருக்கின்றனர். விடிவு சந்தேகமே.
தான் யார் என்பதை காலம் கடந்து பிரகண படுத்தி இருக்கிறார் மகாதீர் !!தானும் இந்த இனத்தில் ஒருவன் என்பதை அவர் உணர்ந்து விட்டார் !ராஜா ராஜா சோழன் ஆண்டான் என்பதெல்லாம் பழைய கதை !! கேதுருனான் இந்தியா என்ற மகாதீர் இந்தியாவிலிருந்து நம் மூதாதையர்கலால் இந்த மண்ணிற்கு வந்த ஒரு இந்தியர் !22 ஆண்டுகள் இந்த மலாய் இனத்தை முட்டாளாக்கி பிரதமராக ஆச்சி செலுத்தியது ! கேதுருனான் இந்தியா !! என்ற நமக்கெல்லாம் பெருமைக்குரிய விசையம் !! INDIA BOLEH !!
s.maniam !
ராஜ ராஜ சோழன் ஆண்டான் என்பதெல்லாம் பழைய கதை !! என்பதுபோல் தமிழர்களை “KELING” அழைத்ததெல்லாம் பழைய கதை.
இந்த 21-ம் நூற்றாண்டில் மலாய்க்காரர்களைப்போல் உலாவரும் மாமாக்களையும், இந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறி மலாய்க்காரனாக மாற முடியாமல் இரண்டும் கெட்டானாக வாழுபவர்களையும் “KELING” என்று நாம் அழைப்போம்.
இனி மலாய்க்காரர்கள் யாராயினும் “KELING” என கூறினால், ஏன் உன் இனத்தை நீயே கேவல படுத்துகிறாய் என்று இந்த இரண்டும் கெட்டான்களை உதாரணமாக சொல்லுவோம்.
சரித்திரத்தை புரட்டி பார்த்தோமானால் கிளிங் என்ற ஓர் இனம் உண்டுதான் ! இவர்கள் இந்தோனீசியாவில் இருந்து வந்தவர்கள் ! குறிப்பாக ,பரமேஸ்வரா ! ஸ்ரீ விஜய ! போன்ற மஜாபாகிட் மன்னர் பரம்பரையில் வந்தவர்களாக இருக்கலாம் ! ! இவர்கள் கலிங்கா பேரரசின் வலி வந்தவர்களாக இருக்கலாம் ! இந்து ஆசியா !என்ற இந்தோனேசியா வில் இவர்கள் இன்னும் இருக்கிறார்கள் ! கெலிங் அல்லது இந்து என்றே அழைக்கிறார்கள் ! இங்கும் நமது நாட்டில் ! AYER PASANG KELING / BAWANG KELING / TANJONG KELING / CAPITAN KELING / மலைக்காரர்களுக்கு கெலிங் என்ற பெயர் இருப்பதையும் பார்க்கிரோம்! ZAINAL KELING என்று கல்வி அமைச்சில் ஓர் உயர் அதிகாரி இருந்தார் . தமிழன் ஏன் இந்த கெலிங் என்ற வார்த்தை கேட்டு அலட்டி கொள்கிறான் என்று தெரிய வில்லை !