1எம்டிபி தொடர்புடைய சிவில் வழக்கில் புத்ரா ஜெயாவும் ஒரு குற்றவாளிதான் என்பதுபோல் அமெரிக்க நீதித்துறையின் பேச்சும் நடவடிக்கைகளும் இருப்பதாக அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறினார்.
“அவர்கள் (விசாரணை முடிவுகளை) அறிவித்த விதம் ஒரு தீர்ப்புரை போலவும் (அதில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள்) குற்றாவாளிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது விட்டதுபோலவும் இருந்தது.
“அவர்கள் பயன்படுத்திய சொல்கள் மலேசியாவையும் அரசாங்கத்தையும் குற்றவாளிகளாகக் காண்பிக்கின்றன”, என நேற்றிரவு சிப்பாங்கில் புத்ரி மற்றும் அம்னோ இளைஞர் ஆண்டுக் கூட்டத்தில் கைரி கூறினார்.
இது “நிரூபிக்கப்படும்வரை ஒருவர் நிரபராதியே” என்ற கோட்பாட்டுக்கு முரணானது என்றாரவர்.