கேஜே, டிஓஜேமீது ஆத்திரம் ஏன்? அது உண்மையைத்தானே சொல்கிறது’

kj ‘அமெரிக்க  நீதித்துறை (டிஓஜே)  1எம்டிபி  சொத்துப்  பறிப்பு    வழக்கில்   புத்ரா  ஜெயா  குற்றம்  புரிந்திருக்கிறது   என்பதுபோல்    நடந்து  கொள்கிறது  என   அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி   ஜமாலுடின்  குற்றம்   சாட்டியிருப்பது    தவறு  என்று   அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“கைரி  நீங்கள்  சொல்வது   தவறு-  அமெரிக்க  நீதித்  துறை   புத்ரா  ஜெயாவைக்  குற்றவாளி  என்று    கூறவில்லை.  அவர்கள்  உண்மையைத்தான்  எடுத்துரைக்கிறார்கள்”,  என  பெட்டாலிங்  ஜெயா   உத்தரா  எம்பி   டோனி  புவா  கூறினார்.

“ஆமாம்,  மலேசியாவின்  முதல்நிலை   அதிகாரி’  1எம்டிபி  வழி   ‘மலேசியர்களின்  வரிப்பணத்தில்’  யுஎஸ்731மில்லியனைக்  கையாடினார்  என்று   டிஓஜே   குற்றஞ்சாட்டியுள்ளது    உண்மைதான்.

“அதில்  என்ன   தவறு?  சந்தேகத்துக்குரியவர்கள்   மீதுள்ள   குற்றச்சாட்டுகளை    எடுத்துரைப்பதுதானே   அரசு  வழக்குரைஞர்களின்   கடமை,  மலேசியாவில்   உள்ளவர்களும்   அதைத்தானே  செய்கிறார்கள்.

“டிஓஜே  மலேசிய  முதல்நிலை    அதிகாரியைக்  ‘குற்றவாளி’  என்று   அறிவிக்கவில்லையே.

“கைரி    உண்மையைத்  ‘தற்காக்க    வேண்டும்’  என்று   அவரது  கட்சியினருக்கு     அறைகூவல்    விடுக்கிறார்.   அம்னோ   இளைஞர்   தலைவரும்   விளையாட்டுத்  துறை   அமைச்சருமான  கைரி   எதை  உண்மை  என்று  கூறுகிறார்  என்பது   மலேசியர்களுக்குத்   தெரிந்தாக   வேண்டும்”,  என  புவா  வினவினார்.