#தங்காப் எம்ஓ1 பேரணி ஏற்பாட்டாளர்கள், நாளை போலீசாரைச் சந்தித்து பேரணி நடத்தப்போவது குறித்து தெரியப்படுத்துவார்கள்.
ஆகஸ்ட் 27-இல் பேரணி நடத்தத் திட்டமிட்டிருப்பதால் 10 நாள்களுக்கு முன்னதாக அது குறித்து அறிவிக்கை கொடுக்கப் போவதாக ஏற்பாட்டுக் குழு பேராளர்களில் ஒருவரான அனிஸ் ஷியாபிகா கூறினார்.
“சரியாக 10 நாள்களுக்கு முன்னதாக டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைமையகத்தில் அறிவிக்கை கொடுக்கப் போகிறோம்.
“பேரணி நடைபெறும் இடத்துக்கு உரிமையாளர் அனுமதி பெறுவது முக்கியம். அது குறித்து நாளை போலீசாருடன் விவாதிப்போம்”, என அனிஸ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
#TangkapMO1 கூட்டணி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இளைஞர்களின் கூட்டமைப்பு அதன் ஆகஸ்ட் 27 பேரணிகளை கோலாலும்பூரிலும் கோத்தா கினாபாலுவிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
கோலாலும்பூரில், பல்வேறு இடங்களில் ஒன்றுதிரளும் அவர்கள் பின்னர் டட்டாரான் மெர்டேகா நோக்கி ஊர்வலம் செல்வார்கள்.
கோலாலும்பூர் பேரணியில் சுமார் 5,000 பேர் கலந்துகொள்வார்கள் என அனிஸ் எதிர்பார்க்கிறார்.