முகைதின் ‘துரோகி’: ஜேஎம்எம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

muhஇன்று   கோலாலும்பூர் ,  ஜாலான்  டூட்டா     நீதிமன்ற   வளாகத்தில்    திரண்டிருந்த   ஜாரிங்கான்  மலாயு   மலேசியா (ஜேஎம்எம்)   அமைப்பைச்   சேர்ந்த   சுமார்   25  ஆர்ப்பாட்டக்காரர்கள்  அங்கு  வந்த   முன்னாள்   துணைப்   பிரதமர்    முகைதின்   யாசினை   நோக்கி   துரோகி   என்று  கூவினார்கள்.

அவர்கள்  முதலில்   நீதிமன்ற   வளாகத்துக்கு    வெளியில்தான்   கூடி  நின்றனர்.  திடீரென்று     உள்ளே  செல்ல   அவர்களுக்கு   அனுமதி   கிடைத்தது.

கையில்  ஒலிப்பெருக்கி  ஏந்தியிருந்த    அவர்கள்   ‘Muhyiddin petualang(துரோகி) ‘ எனக்  கூவினர் .

அந்த  ஆர்ப்பாட்டக்காரர்கள்  வழக்குரைஞரும்   முன்னாள் டிபிபி-யுமான  ஸ்டேன்லி    கிளெமெண்ட்டுக்கும்  நிக்கா   கீ -க்குமிடையிலான   மணவிலக்கு   வழக்கு   தொடர்பில்   அங்கு   கூடியிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களிடையே,  அலி    திஞ்சு    என்ற   பெயரில்   பிரபலமாக    விளங்கும்   முகம்மட்   அலி   பஹாரோமும்  காணப்பட்டார்.

முகைதினை  ஒரு  பொய்யர்   என்று    வருணித்த  ஆர்ப்பாட்டக்காரர்கள்,  அவர்   திருமணமான   ஒரு  பெண்ணுடன்  கள்ளத்   தொடர்பு  வைத்திருந்தாகவும்     அது   குறித்து    அவர்  விளக்கம்   அளிக்க   மறுக்கிறார்  என்றும்        குற்றம்    சுமத்தினர்.

காலை  மணி  11   அளவில்   சாதாரண  உடை   அணிந்திருந்த   போலீசார்  ஆர்ப்பாட்டக்காரர்களைக்   கைது   இழுத்துச்   சென்றனர்.