சீனா 1எம்டிபி-இல் முதலீடு செய்வது மலேசியாவின் பாதுகாப்புக்குப் பாதகமாக அமையாது என மலேசியாவுக்கான சீனத் தூதர் ஹுவாங் ஹூய் காங் உறுதி கூறுகிறார்.
மாறாக, அது, ஏற்ற இறக்கமாக உள்ள மலேசியாவின் நிதி நிலவரத்தை நிலைப்படுத்த உதவும் என்றாரவர். ஹுவாங், சிலாங்கூர், சுங்கை லோங்கில் யுடார் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
“முதலீடும் ஒத்துழைப்பும் பரஸ்பர நன்மை என்ற நோக்கத்தைக் கொண்டவை. எல்லாமே வெளிப்படையாகவும் மலேசிய சட்டப்படியும் செய்யப்படுக்கிறது. சீனா மலேசியாவிலிருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை. மாறாக, மலேசியா அதன் நிதி நிலையைத் திடப்படுத்த சீனா உதவுகிறது, அதன் வெற்றிக்கு உதவுகிறது”, என்றவர் விளக்கினார்.
தென்சீனக் கடல் தகராறு போன்ற விவகாரங்களில் மலேசியா வாயைத் திறக்காமலிருக்கத்தான் 1எம்டிபி-இல் முதலீடு செய்யப்படுகிறதா என்றும் ஹுவாங்கிடம் வினவப்பட்டது.
“இல்லை. இதற்கும் மற்ற விவகாரங்களுக்கும் தொடர்பில்லை. இது முழுக்க முழுக்க பொருளாதார ஒத்துழைப்புத்தான்”, என்றவர் அழுத்தந் திருத்தமாகக் குறிப்பிட்டார்.
நல்ல கையாடல்! நல்ல கைகோர்ப்பு! இரு பக்கமும் சீனரே! மலேசியா கோவிந்தா! கோவிந்தா!
இந்த சீன தூதர் பெட்டாலிங் சாலைக்கு தனது வருகைக்கு பின் மலேஷியா சீனர்களின் மேல் ORU தரப்பினர் வசைபாடுவது, மிரட்டுவது ,சீன பாபி என்று சொல்வது ,சீனர்களுக்கு எதிராக சில மலாய் நாளிதழ்களில் இனத்துவேசம் பரப்புவது போன்ற சம்பவங்கன் சற்று தணிய தொடங்கிவுள்ளது, அதே சீன தூதர் இவாறு அறிகையைவிடுவது உண்மையிலே மிரட்டலாக உள்ளது.எங்கே இல்ங்கையீல், மியான்மரில் போன்ற நாடுகளில் பொருளாதாரத்தை வசப்படுத்திய போன்று இங்கும் சீனா தந் ஆதிக்கத்தை செலுத்தும் மா? பண்டார் துன் ரசாக்கை மேற்ப்பட்டு பணிகளை தன் வசமாக்கிக்கொண்டதை இன்னும் நம் நினைவில் உள்ளது.