தென் பிலிப்பீன்சில் பிணையாளி ஒருவருக்குப் பிணைப்பணம் கொடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் பிணையாளியின் தலையைத் துண்டித்ததாக இராணுவப் பேச்சாளர், மேஜர் பிலிமோன் டான் கூறினார்.
பெட்ரிக் ஜேம்ஸ் அல்மோடாவர் என்று அடையாளம் கூறப்பட்ட அப்பிணையாளியின் துண்டிக்கப்பட்ட தலை மணிலாவுக்கு ஆயிரம் கிலோமீட்டர் தெற்கே ஜோலோ தீவின் ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு, ஒரு சாலை ஓரமாக அது வீசப்பட்டிருந்தது.
அல்மோடாவர் ஜூலை 16-இல் ஜோலோ நகரில் அபு சய்யாவ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க கடத்தல்காரர்கள் ஒரு மில்லியன் பெசோ (ரிம24,000) கோரினார்கள்.
இந்த உலகத்தின் 7 பில்லியன் மக்களை சில ஆயிரம் நாதாரிகள் பிணையில் வைத்திருக்கின்றனர்
இவ்வளவு ராணுவமிருந்தும் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை அநியாயங்களையும் அட்டூழியங்களையும் கட்டவிழ்த்து விட்ட இந்த ஈனர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. பல மேற்கத்தியர்களுக்கு இன்னும் உரைக்கவில்லை.