மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் “பெரிய மீன், சின்ன மீன்” என்று வேறுபாடு பார்த்து செயல்படுவதில்லை, என்ன ஆதாரம் இருக்கிறதோ அதன் அடிப்படையில்தான் செயல்படுகிறது என அவ்வாணையதின் அதிகாரி முகம்மட் ஜமிடான் அப்துல்லா கூறினார்.
“எம்ஏசிசி-இல் நாங்கள் பெரிய மீன், சின்ன மீன் என்று தேர்ந்தெடுத்து வேலை செய்வதில்லை.
“விசாரணை செய்வதற்கு ஆதாரங்கள் அவசியம். இல்லை என்றால் எதைக் கொண்டு குற்றம் சாட்டுவது?”, என்றவர் வினவினார்.
எம்ஏசிசி பெரிய மீன்களைப் பிடிப்பதில்லை என்று குறைகூறப்படுவது குறித்து கருத்துரைத்தபோது முகம்மட் ஜமிடான் இவ்வாறு கூறினார்.
இதற்கு முன் சுங்கத் துறையில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என்று கூறி விசாரணையின்றியே மூடி மறைக்கப் பட்டதற்கும் இதுதான் காரணமா?
2.6 பில்லியன் மற்றும் 42 மில்லியன் விசாரணை என்னவானது?? ஆதாரம் இல்லையோ???? எமது வங்கிக்கணக்கில் ஐம்பது ஆயிரம் ரிங்கிட்டுக்கு மேல் வரவு செய்திருப்பின் பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்று மத்திய வங்கியே விசாரிக்கும்போது, மேற்குறிப்பிட்ட தொகையின் ஆதாரம் என்னவோ?? எல்லாம் வாய்ச் சொல்லின் வீரரே!!!!
இந்த நாட்டில் இன்னும் எவ்வளவோ நடந்திருக்கிறது நடக்கிறது நடக்கும் ஒன்றும் செய்ய முடியாது — இப்போது நடப்பது எல்லாம் நிழல் நாடகம். பல விஷயங்கள் அப்பட்டமாக நடந்தாலும் கேட்க நாதி இல்லை.