முன்னாள் துணைப் பிரதமர் கப்பார் பாபாவின் புதல்வர் தம்ரின் அப்துல் கப்பார், குடிமக்கள் பிரகடனச் செயலகத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
“தீர ஆலோசித்த பின்னர் மகாதிர் தலைமையில் செயல்படும் குடிமக்கள் பிரகடனச் செயலகத்திலிருந்து விலக முடிவெடுத்தேன்”, என்று தம்ரின் இன்று அறிக்கை ஒன்றில் கூறினார்.
முன்னாள் அம்னோ உறுப்பினரான தம்ரினுக்குப் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பார்டி பிரிபூமி பெர்சத்து(பெர்சத்து)வில் சேரும் எண்ணமும் இல்லை.
“இந்த முடிவு இறுதியானது”, என்றாரவர்.
தம்ரின் 2012-இல் பாஸில் சேர்ந்து ஈராண்டுகள் கழித்து அதிலிருந்து விலகினார். இப்போது அவர் எந்தக் கட்சியிலும் இல்லை.
உலகம் தாங்குமா?நாடடுக்கு மிக பெரிய பேரிழப்பு.
சந்தர்ப்பவாதி!
கழற்றிவிடப்பட்ட காலனி இருந்தாலென்ன வீசப்பட்டாலென்ன???