நஜிப் அப்துல் ரசாக் சரவாக் எஸ்பிம் மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மடிக் கணினி வழங்கப்படுகிறது.
ஏப்ரல் மாதம், சரவாக், சுங்கை லாடோங் பள்ளிக்குச் சென்றிருந்தபோது பிரதமர் அம்மாநிலத்தில் கல்வித் தரத்தை உயர்த்த ஆர்வம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அதன் பொருட்டு அம்மாநில எஸ்பிஎம் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படும் என்றார்.
இத்திட்டத்தின்படி, நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மாநிலத்தின் உள்பகுதிகளிலும் உள்ள 33,000 எஸ்பிம் மாணவர்கள் மடிக் கணினிகளைப் பெறுவார்கள்.
“வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. சரவாக் மாணவர்கள் அவர்களின் படிப்பில் மேலும் சிறப்பான தேர்ச்சியைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்”, என்று புத்ரா ஜெயாவில் ஐந்து மாணவப் பேராளர்களிடம் மடிக் கணினிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் நஜிப் கூறினார்.
தமிழ் நாட்டு அரசியலை உன்னிப்பாக கவனிப்பான் போலும். வரும் தேர்தலுக்கு ஆயத்தம். உதவுவது தவறில்லை ஆனால் …………………………….