அதிகார அத்துமீறல், ஊழல் விவகாரங்களுக்காக அரசாங்கத் தொடர்புடைய ஒரு வங்கியின் நிர்வாக இயக்குனரையும் மேலும் மூவரையும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் கைது செய்தது. விசாரணைக்காக அவர்கள் மூன்று நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர்.
40-வயதான வங்கி இயக்குனரிடமிருந்து ரிம20,000- ரிம30,000 மதிப்புள்ள ஆறு கடிகாரங்களை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் கைப்பற்றியது. அந்த இயக்குனர் ஒரு ‘டத்தோ’வும் ஆவார்.
அந்நால்வரையும் விசாரணைக்காக மூன்று நாள்களுக்குத் தடுத்து வைக்க மெஜிஸ்திரேட் நிக் இஷாபானி தஸ்னிம் வான் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வங்கியின் முன்னாள் ஊழியர். மற்றுமிருவர் ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஹா ஹா ஹா . இதெல்லாம் கண்ணாமூச்சி விளையாட்டு. இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்று நம்மை விட ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கிறவர்களுக்கு நன்றாகவே தெரியும்-ஆனால் தெரியாது. உங்களுக்கு புரிந்தால் சரி. நமது பக்கத்து புள்ளி நாட்டை போல் எல்லாம் நடந்தால் நாம் புள்ளிநாட்டைவிட எங்கோ போயிருக்கலாம்.