“#தங்காப் எம்ஒ1” பேரணி நஜிப்பின் கொடும்பாவி போலி சிறையில் அடைக்கப்பட்டதுடன் முடிவுற்றது

 

Tangkaprally6இன்று பிற்பகல் மணி 4.35 அளவில் மிகப் பெரிய அளவிலான பிரதமர் நஜிப்பின் கொடும்பாவியை அனிஸ் ஸயாஃபிக் போலி சிறையில் அடைத்ததுடன் முடிவுக்கு வந்தது.

நஜிப்பின் வளர்ப்பு மகன் ரிஸா அசிஸ், நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் மற்றும் வணிகர் ஜோ லோ ஆகியோரின் கொடும்பாவிகளும் அப்போலி சிறையில் அடைக்கப்பட்டது.

அமெரிக்க நீதித்துறை தொடந்துள்ள வழக்கில் லோ மற்றும் ரிஸா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கில் ரிஸாவின் எம்ஒ1 என்பவர் ரிஸாவின் உறவினர் என்றும் மலேசியாவில் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இபேரணியின் இறுதிக்கட்டத்தில் கூட்டத்தினர் கலைந்து போய்க்கொண்டிருக்கும் போது Tangkaprally12“மெர்தேக்கா, மெர்தேக்கா! நாம் மீண்டும் பெர்சே 5.0 இல் சந்திப்போம்” என்று அறிவிப்பாளர் முழங்கினார்.

இப்பேரணி பிற்பகல் மணி 2 க்கு தொடங்கி சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.

மகாதிர் வரவில்லை

முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இப்பேரணியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் லங்காவிக்கு செல்ல வேண்டியிருந்ததால் அவர் இதில் கலந்துகொள்ள இயலவில்லை என்று அவரது உதவியாளர் மலேசியாகினியிடம் கூறினார்.

இப்பேரணியில் 1,500 க்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் டாத்தாரன் மெர்தேக்காவுக்கு அணிவகுத்துச் சென்றனர். ஆனால், 2,000 மேற்பட்டவர்கள் அங்கு கூடியிருந்தனர் என்று பெர்சத்துவின் தற்காலிக உறுப்பினர் ஸையிட் ஸட்டிக் கூறிக்கொண்டார்.

இப்பேரணியில் ஏன் கலந்துகொண்டுள்ளீர் என்று 24 வயது சட்டத்துறை மாணவி ரகுணாவிடம் கேட்டதற்கு, “நான் இங்கு இருக்கிறேன் Tangkaprally2அதனால் நம் அனைவருக்கும் நீதி கிடைக்கக்கூடும்… எனக்கு வேண்டியது ஒரு சிறந்த நாடு; யார் வருகிறார், போகிறார் என்பது பற்றிய கவலை எனக்கில்லை”, என்றாரவர்.

“எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றிய முழுமையான விசாரணை வேண்டும். நம்மை மடையர்களாக்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்; மக்கள் மடையர்கள் அல்ல”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

ஜாலான் துன் ரசாக்கில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது

Tangkaprally3பேரணியில் பங்கேற்றிருந்தவர்கள் சாலையில் அமர்ந்து கொண்டு வழிவிட மறுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வழி விடுமாறு பல போலீஸ்காரர்கள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த அவர்கள் அட்டைகளை ஏந்திக்கொண்டு “நஜிப் பதவி துறக்க வேண்டும்” என்று முழங்கினர்.

இறுதியாக, வாகனங்கள் ஜாலான் டிஎஆர்க்கு  திருப்பிவிடப்பட்டது.

வெட்கம், வெட்கம்

ஸயாஃபிக், 24, இன்றைய பேரணியின் விளைவாக நஜிப் பதவி துறக்கப் போவதில்லை. அதைச் செய்வதற்கு பெர்சே 5.0 தேவைப்படும் என்று மலேசியாகினியிடம் கூறினார்.

இன்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொள்ளாதவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், ஊழல் தலைவர்களிடமிருந்து மலேசியாவைக் காப்பாற்ற முன்வராதவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று மேலும் கூறினார்.