மலேசியாவின் முதல் ஸிக்கா நோயாளி

zikaகிள்ளானைச்  சேர்ந்த    ஒரு  பெண்மணிக்கு  ஸிக்கா  நோய்    கண்டிருக்கலாம்   எனச்    சந்தேகிக்கப்படுவதாக   சுகாதார   அமைச்சு   இன்று   அறிவித்தது.  அவரே  மலேசியாவின்   முதல்  ஸிக்கா  நோயாளியாக  இருக்கக்கூடும்.

அந்த  58-வயது   அம்மையார்,  சிங்கப்பூரில்   ஸிக்கா  நோய்க்கு  ஆளான   ஒரு  பெண்ணின்   தாயாராவார்   என  சுகாதார  அமைச்சர்   டாக்டர்   எஸ்.சுப்ரமணியம்     தெரிவித்தார்.

அவரிடம்   ஸிக்கா  நோய்க்குறிகள்  தென்படுகின்றன.  ஆனாலும்,  அவர்  ஸிக்கா  நோயால்  பாதிக்கப்பட்டுள்ளார்    என்று  இன்னும்    உறுதி  செய்யப்படவில்லை.  இரத்தப்  பரிசோதனை    முடிவுகள்   வந்த  பின்னர்தான்   அவருக்கு    அந்நோய்   உண்டா,  இல்லையா   என்பது  உறுதி  செய்யப்படும்.