முன்னாள் ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

protestஇந்திய   கட்சிகளையும்  இந்திய   என்ஜிஓ-களையும்    சேர்ந்தவர்கள்    ஒரு   அனைத்துலக    மாநாட்டில்     கலந்துகொள்ள   மலேசியாவுக்கு வந்துள்ள  இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக  இன்று   ஆர்ப்பாட்டம்  செய்தனர்

ஆர்ப்பாட்டக்காரர்கள்,  மாநாடு   நடக்கும்    புத்ரா  உலக  வாணிக   மையத்துக்குள்   செல்வதைத்  தடுக்கக்  கலகத்  தடுப்புப்  போலீசார்  நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்  போலீசுக்குமிடையில்  மோதல்   எதுவும்  நிகழவில்லை.

ராஜபக்சே   ஸ்ரீலங்கா   உள்நாட்டுப்   போரின்போது   ஆயிரக்கணக்கான   தமிழர்களைக்  கொன்று  குவித்தவர்   என்றும்  அவரை  உடனடியாக  நாட்டை   விட்டுத்   திருப்பி  அனுப்ப   வேண்டும்   என்றும்   ஆர்ப்பாட்டக்காரர்கள்   கோரிக்கை  விடுத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களில்  ஒருவர்,  ராஜபக்சே   மாநாட்டில்  கலந்து   கொண்டிருப்பதை   உறுதிப்படுத்தினார்.

“அவர்  அங்குள்ளார்.  பலர்  அவருடன்  படமெடுத்துக்  கொள்வதைப்  பார்த்தேன்”,  என்றார்.