பதிகோலை எம் ஏசிசியிடம் ஒப்படைத்த கைரி அதன் உள்ளடக்கத்தைப் பொதுவில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

khairi இளைஞர்,  விளையாட்டுத்  துறை    அமைச்சர்  கைரி  ஜமாலுடின்,  மலேசிய  கால்பந்து   சங்கத்தில்   நடக்கும்  ஊழல்  பற்றிய  தகவல்களைக்  கொண்டிருப்பதாகக்  கூறப்படும்    பதிகோலை (pendrive)   மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையத்திடம்   இன்று  ஒப்படைத்தார்.

அந்தப்  பதிகோலை  கைரியிடம்   கொடுத்தவர்   ஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு    இஸ்மாயில்   சுல்தான்  இப்ராகிம்.

பதிகோலை  எம்ஏசிசி-இடம்   ஒப்படைத்த  கைரி,   அதில்  உள்ள   தகவல்களின்   அடிப்படையில்  விசாரணை   நடத்தப்படுமானால்   விசாரணைக்குப்  பிறகு    அதில்  உள்ள   தகவல்களைப்   பொதுவில்    வெளியிட  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.

“அது    பொதுமக்கள்   ஆர்வம்   காட்டும்  விவகாரமாக    மாறியுள்ளதால்,  பதிகோலின்  உள்ளடக்கத்தைப்   பொதுவில்   வெளியிட  வேண்டும்  என்று   கேட்டுக்கொண்டேன்.

“விசாரணை  முடிந்த  பிறகு   அதை   வெளியிடலாம்”,  என  கைரி  கூறினார்.