கபாலி திரைப்படம் நிழலா, நிஜமா? என்ற கேள்விகளின் வழி இந்திய சமூகத்தில் உள்ள சமூக பிரச்சனைகளின் ஆய்வு களமாக ஒரு நிகழ்ச்சியை டெனிசன் ஜெயசூரியா நடத்தினார். அதில் பசுபதி சிதம்பரம், உதவும் கரங்கள் முரளி மற்றும் சினிமா விமர்சகர் முனைவர் அட்லி ஆகியோர் வருகையாளர்களாக கலந்து கொண்டனர்.
அதில் கலந்து கொண்ட அலியா அஸ்கார் என்ற மலேசியாகினி நிருபர் வெளியிட்ட ஒரு தப்பான கருத்தை உறுதி செய்யாமல், தன்னை ஒரு முன்னிலை நாளேடு என்று மார்தட்டும் ஒரு நாளேடு அந்தத் தப்பான கருத்தோடு பொய்களையும் கலந்து பல அவதூறான செய்திகளை பசுபதி சிதம்பரம் அவர்களுக்கு எதிராக வெளியிட்டது.
இதற்கிடையில், மலேசியாகினி தவறாக வெளியிட்ட கருத்தை மீட்டுக்கொண்டுள்ளது. ஆனால், இந்த குறிப்பிட்ட நாளேடு வாசகர்களுக்கு உண்மையைச் சொல்லும் தைரியமற்ற நிலையில் தொடர்ந்து பொய்யில் பிதற்றுவது அதன் ஆசிரியர் குழுவின் மலட்டுத்தன்மையையும் மானங்கெட்டதன்மையையும் காட்டுகிறது.
பொய்யான செய்தியை பிரசுரம் செய்து, அதையே வைத்து பொய்யான கருத்துக்கணிப்பை உருவாக்கி, ஒரு பொய்யை மெய்யாக்கத் துடிக்கும் இந்த நாளிதழுக்கு வெகுவிரைவில் மக்களின் செருப்படிதான் கிடைக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது.
அந்த நாளேட்டின் கேவலமான நடத்தையை அம்பலப்படுத்தும் வகையில் அந்த கபாலி களத்தை ஏற்பாடு செய்த குழுவினர் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை அமைந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
“ஆகஸ்ட் 25, 2016 இல், மலேசிய தேசியப் பல்கலைக்கழக, இன ஆய்வுக் கழகத்தின் சமகாலத்திய மலேசிய இந்திய நுண்ணாய்வுக் குழு, பெட்டாலிங் ஜெயா ஆசிய பசிபிக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த தமிழ்ப்படம் கபாலி பற்றிய கலந்துரையாடலில் ஒரு வருகையாளராக கலந்து கொண்ட திரு சி. பசுபதி என்ன கூறினார் என்பது பற்றி அவர் அளித்த விளக்கத்தை நாங்கள் செவிமடுத்தோம்.”
“தமிழ்ப்பள்ளிகள் குண்டர்தனத்தின் பிறப்பிடம் அல்லது குண்டர் கும்பலை உருவாக்கும் தலம்” என்று திரு பசுபதி கூறவில்லை என்பதை எங்களால் உறுதிப்படுத்த இயலும்”, என்று அக்குழு கூறுகிறது.
மேலும், “சமூக பொருளாதார நிலையில் பலவீனமான பின்னணியில் உள்ளவர்களின் குழந்தைகள், எந்த வகைப் பள்ளிக்குச் சென்றாலும், அவர்கள் குண்டர்தனத்தின் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை பற்றிய அவரது பகிர்வு தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்பதோடு, மலேசியாவில் பாதிப்புக்கு உள்ளாகும் அபாய நிலையில் உள்ள இந்திய இளைஞர்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக திரு. எஸ். பசுபதியும் மைஸ்கில்ஸ் அறவாரியமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டுவதாக அந்தக் கூட்டறிக்கை கூறுகிறது.
அதோடு, “மலேசியாவிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் தேசிய பரம்பரைச் சொத்து என்பதையும் அது மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான ஒரு பண்பாட்டு அடையாளம் என்பதையும் வலியுறுத்தி பிரகடனம் செய்வதற்காக நாங்கள் 2016 ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று நண்பகலில் சந்தித்தோம்.”
“சமூகப் பிரச்சனைகளைக் களைவதற்கு அரசாங்கமும் சமூகமும் ஆற்றிய பங்கை நாங்கள் உறுதி செய்கிறோம்” என்று கூறும் அந்த அறிக்கை மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ எ. வைத்திலிங்கம், முனைவர் டத்தோ என். எஸ் இராஜேந்திரன், எம். முத்துசாமி, பேராசிரியர் டாக்டர் கே. எஸ். நாதன் மற்றும் டத்தோ டாக்டர் டெனிசன் ஜெயசூரியா, மற்றும் எஸ். சுப்பிரமணி, கா. ஆறுமுகம் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இதில் பசுபதி அவர்கள் விளக்கம் அளித்தார்.
மேலும், அந்த அறிக்கை, “அபாய நிலைக்கு உள்ளாகும் இந்திய இளைஞர்களைப் பாதிக்கும் அடிப்படைக் காரணங்கள் மீது கவனம் செலுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுமாறு நாங்கள் சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம். சமூகமும் நாடும் மேம்பட்ட நிலையை அடைவதற்கான ஆற்றல் மிக்க தீர்வுகளின் மீது தொடந்து கவனம் செலுத்துவதற்காக அனைவரையும் முன்நோக்கிச் செல்லுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”, என்கிறது.
“தமிழ்ப்பள்ளிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை. நான் அதைச் செய்யவே மாட்டேன். நான் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நிலை ஏற்பட்டிருந்தால் அது வருத்தத்திற்குரியதாகும்”, என்ற பசுபதியின் நிலைப்பாட்டையும் அவ்வறிக்கை வெளியிட்டுள்ளது .
அந்த பத்திரிக்கைக்கு நல்லதொரு கொட்டு. பத்திரிகை வியாபாரம் மட்டுமே நோக்கமாக கொண்டில்லாமல் இந்தியர்கள் நலனையும் தமிழ் பள்ளிகளின் நலனையும் மனத்தில் நிறுத்தி பேசுவதும் அறிக்கைகள் விடுவதும், செய்திகள் போடுவதும் அனைவருக்கும் நன்மை பயக்கும்.
இது தேவை இல்லாத ஒன்று திரு. பசுபதி மேல் அன்பு கொண்டவர்கள் செய்த நல்ல செயல் நானும் அவரின் நல்ல மதிப்பு வைத்து உள்ளேன் கரணம் அவர் ஒரு சிறந்த நல்ல மனிதர் என்று. என் கேள்வி என்ன வென்றால் இப்படி ஆளுக்கு ஆள் என்று அவரின் மேல் பாசம் அன்பு பரிவு அதற்கு மேல் இரக்ககுணம் கொண்ட நீங்கள் இந்த டெனிசன் ஜெய சூரியா கும்பல் முன்பு தானத லைவன் செய்த அட்டுழியங்கை கேட்கமால் எங்கேடா போனீர்கள் பிறகு வந்த எம்ஐஸ்சி தலைவர்கல் செய்யும் செய்த அட்டுழியங்கை கேட்காமல் எங்கேடா போனீர்கள். சபிமாம் காலமாக திரு கமலநாதன் மேல் அவதூறு சொல்லும் சொல்லி கொண்டு இருக்கும் நாம் ஒன்றும் செய்யவில்லையே. இப்படி ஒரு கூட்டம் போட்டு செய்து இருந்தால் நன்றாக இருக்கும். சும்மா பேர் வாங்க பத்திரிகையில் நமது படம் வர வேண்டும் என்று சும்மா வேடிக்கை காட்டாமல் அவரவர் வேலையை பாருங்கள். திரு. பசுபதி அய்ய ஒரு நல்ல மனிதர் சலசலப்புகு அஞ்சாதவர். அவர் வேலையை செய்ய விடுங்கள் அதே போல் நண்பன் பத்திரிகையும் அவர்களின் வேலையை செய்ய விடுங்கள் அப்போதான் சில உண்மை ரகசியங்கள் வெளிச்சதிற்கு வரும் அதை விடுது சும்மா அறிக்கை விடுவதை நிறுதுங்கள். நண்பன் செய்வேனே அவன் வேலையை செய்கிறான். அவன் வாயை மூட சொல்ல நாம் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டாம். நண்பன் போன்ற பத்திரிகை இருக்கும் வரை நமது சமுதாயம் நல்ல வெளிச்சம் பெரும். இல்லை என்றால் ஜாதி வெறி பிடித்த நாய்கள் பத்திரிக்கைகள் நாம் வாங்க வேண்டி வரும்.
G.Mohan’s comments make sense!
“நண்பன் செய்வேனே அவன் வேலையை செய்கிறான். அவன் வாயை மூட சொல்ல நாம் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டாம். நண்பன் போன்ற பத்திரிகை இருக்கும் வரை நமது சமுதாயம் நல்ல வெளிச்சம் பெரும். இல்லை” ஜி மோகன் உளறல் புரியவில்லை. நண்பன் அவன் வேலையாக எதை செய்கிறான். நல்ல காரியங்கள் செய்ப்பவர்களை பற்றி அவதூறாக எழுதி வாணிபம் செய்யும் துரோகி. இந்த பத்திரிகை யாருக்கு யாரால் நடத்தப்படுகிறது?
பொய்யான செய்தியை பிரசுரம் செய்து, அதையே வைத்து பொய்யான கருத்துக்கணிப்பை உருவாக்கி, ஒரு பொய்யை மெய்யாக்கத் துடிக்கும் இந்த நாளிதழுக்கு வெகுவிரைவில் மக்களின் செருப்படிதான் கிடைக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது என்பதில் தெரியும் ஆதங்கம் என்னைப்போன்று பத்திரிகை துறையில் இருந்தவர்களுக்கு புரியும்.
அமைதியாக இருப்பது அநியாயத்திட்கு அடிபணிந்து விட்ட்தாக ஆகிவிடாது.
திரு. முருகனார் ஒரு நல்ல கருத்தை யோசித்து என் கருத்தை நன்கு வசித்து சொன்னமைக்கு நன்று. ஆம், உங்களை போன்ற பத்திரிகை துறையில் இருந்தவர்களுக்கு நன்கு புரியும். அனால் எனக்கு தெரியது நண்பரே காரணம் நான் பத்திரிகை துறையில் வேலை செய்தது இல்லை இருப்பினும் கொஞ்சம் கேள்வி பட்டு உள்ளேன் அதாவது ஒரு பொய் செய்திகளை பிரசரிதாள் அரசாங்கம் உடனடியாக நவடிக்கை எடுக்கும். அதன் உரிமம் பறிக படும் அதுதான் உண்மை. அடுத்து அந்த பத்திரிகை வைத்து நடத்தும் அதன் முதலாளி ஒரு முஸ்லிம்மாக இருக்கலாம் ஆனால் அங்கு வேலை செய்யும் நண்பர்கள் 90 சதவிதம் முஸ்லிம் அல்லாதவர்கள் இவர்களுக்கு திரு. முருகனார் நல்ல வேலை தேடி கொடுத்தாள் கோடி புண்ணியம் கிடைக்கும் நண்பரே உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும். – அடுத்து இங்கு சில தமிழ் பத்திரிகைகள் முடு விழாவும் கண்டும் உள்ளன இப்போது. இருக்கும் தமிழ் பத்திரிகைகள் நல்ல சிறப்பாக அதன் சேவைகளை சிறப்பாக செய்கின்றன முதன்மையாக நண்பனும் ஒன்று. – இங்கு நமது நாட்டில் மற்ற பல இன பத்திரிகைகள் நம்மை விட அதிக ஈடு பாடு கொடுத்து அவர்களின் இனம் சிறப்பாக இருக்க கடுமயான விமர்சணங்கள் அவர்களின் இனத்தை தொட்டு எழுதுகின்றன எழுதியும் வருகின்றன. இது ஒரு பத்திரிகை யில் வேலைசெய்த அறிவாளிக்கு தெரியும் என்று நினைக்கிறன்.
நான் நீண்ட நாள் நண்பன் வாசகன். கடந்த சில நாட்களாக பார்த்தாலே பிடிக்கல. வாசகர்கள் முட்டாள்கள் என நினைத்து பத்திரிகை நடத்த கூடாது. பார்க்கும் பக்கமெல்லாம் அதே பொய்யான தகவல். பசுபதியை மக்களின் எதிரியாக காட்டுவதற்கு அது தந்து தலையில் மண் வாரி போட்டுக்கொண்டது.
‘தவறாக மேற்கோள் காட்டப்பட்டு” என்பது தவறு. வேண்டுமென்றே தவறாக மேற்கோள் காட்டப்பட்டு அதனை வேண்டுமென்றே தங்களது பத்திரிகையில் போட்டு டமாரம் அடித்து பசுபதி அவர்களின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பது தான் நோக்கம்! அதில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்! ஆனால் ஐயா அவர்கள் இதற்கெல்லாம் அஞ்சுபவர் அல்ல! அவருக்கும் நண்டு கதை தெரியும் தானே!
நண்பனா? துரோகியா! அதன் முதலாளி முறையா வருமான வரி காட்டுவதில்லை, ஆதாரம் என்னிடம் உள்ளது. ஒரு புகார் செய்ய திடடம் உள்ளது. முறையாக சம்பளம் கொடுப்பதும் இல்லை. எங்கே போகிறது வருமானம். இது சார்பாக சில கருத்துக்களை செம்பருத்தி வெளியிடுமா? தைரியம் உள்ளதா?
ஜி .மோகன் .கிள்ளான் , முருகனார் , abraham terah இன்னும் மற்றும் பலர் பசுபதி அவர்களுக்கு ஆதரவாக பேசுவதை பார்த்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ! இப்படிப்பட்ட ஒரு நல்ல சமூக சேவையாளரைதான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன் .
நான் நீண்ட நாள் நண்பன் வாசகன். தயவு செய்து தவற்றை உணர்ந்து வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டு கேளுங்கள். அல்லது உங்கள் செய்தியை உறுதி படுத்துங்கள். இல்லையேல் ஏன் போன்ற வாசகர்களை இழக்க வேண்டி வரும். உண்மையை எழுதுங்கள் ……
7 வயதிலிருந்து 12 வயதிற்குள் தமிழ் பள்ளி மாணவர்கள் எந்த குண்டர் கும்பளை வலி நடத்த முடியும் ?
MIC தான் தமிழ் பள்ளியில் குண்டர் கும்பலை உருவாக்கிய பொடடயனுங்க மோகன் சாமீ வேலு விக்னேஸ்வரன் பழனி வேலு தேவமணி smc தம்பிராஜாஹ் காத்தமுத்து பேரன் குப்பத்து சரவணன்…. கீழ்த்தர நிறைந்த MIC கபோதிகள்தான் இதற்க்கு காரணம்
நண்பர்களே ! அன்றும் சரி , இன்றும் சரி , ம இ கா காரனுங்க நம்ப பெயரை ( இந்தியர்கள் ) சொல்லியே , அரசாங்கம் நமக்கு கிள்ளிப்போட்ட மானியங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் இவனுங்க பொண்டாட்டி புள்ளைங்க பெயரில் போட்டுக்கிட்டானுங்க ! இப்படி சொல்வதற்க்கு எனக்கு சகல உரிமையும் உண்டு !! ப்ளஸ் பேக் கதை சொல்கிறேன் , உங்கள் யாருக்காவது பொழுது போகவில்லை என்றால் இதை படியுங்கள் . 1990 களில் ஒரு நாள் RTM தமிழ் செய்தியில் , தானை தலைவர் சாமிவேலு , மலேசிய இந்தியர்களுக்காக சிறு தொழில் கடனுதவி திட்டம் ம இ கா ஆரம்பிக்க போகிறது என்று திருவாய் மலர்ந்தார் ! நானும் அதை நம்பி என்னுடைய ஏமாந்த மூன்று நண்பர்களையும் அழைத்துக்கொண்டு
அப்போதிருந்த JKR அலுவலகத்துக்கு சாமிவேலுவை வாழ்க்கையில் முதல் தடவையாக காண சென்றோம் .அப்போதெல்லாம் சாமிவேலுவை பார்க்க அந்த அலுவலகத்துக்கு நூறு பேருக்கு மேல் அங்கே வைத்திருக்கும் சங்கீத நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள். சங்கீத நாற்காலி என்று இங்கு குறிப்பிட்டதற்கு ஒரு காரணம் உண்டு ! சாமிவேலுவை முதன்முதலில் பார்த்த ஒருவர் அந்த நாற்காலியை விட்டு எழுந்து போவாரானால், அவர்பக்கத்தில் அமர்ந்து இருந்தவர் காலியான நாற்காலியில் அமரவேண்டும். இப்படியாக அவரை காண வந்த நூறு பெரும் நாற்காலிகள் மாறி மாறி அமர்வதால், அதை பார்ப்பதற்கு தமிழ் பள்ளிகளின் போட்டி விளையாட்டின் போது நடத்தும் சங்கீத நாற்காலிதான் ஞாபகத்துக்கு வரும் ! முதல் தடவையாக அவரை பார்த்த பொழுது ” இன்னும் அந்த திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை , ஆரம்பித்தவுடன் சொல்கிறேன் மீண்டும் வாருங்கள் என்றார்.” இரண்டாவது தடவையாக போய் பார்த்த பொழுது ,” கிள்ளான் பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு முதலில் இந்த திட்டத்தை செயல் படுத்த இருக்கிறோம், வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் இன்னும் மூன்று மாதம் கழித்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார் !! மூன்று மாதம் கழித்து போய் பார்த்தோம் , ” இந்த கடனுதவி திட்டத்தை கிள்ளான் பகுதியில் செயல்படுத்தி தோல்வி கண்டுவிட்டோம் , கடனாக பணம் பெற்றவர்களை இப்போது லாயர்கள் வைத்து தேடிக்கொண்டிருக்கிறோம் ” என்று போட்டாரே ஒரு போடு , சாமி வேலுவா கொக்கா ! இதை படித்த நண்பர்களே ! பணம் உள்ளவனுக்கு கவலையில்லை, என்னைப்போன்ற பணம் இல்லாதவன் இப்படித்தான் பிணமாக மாறி இவனுங்களை தொங்க வேண்டியிருக்கிறது !! இதுமட்டுமல்ல கதை , இன்னும் டத்தோ சரவணனை நான் பார்க்க போய் பட்ட அவமானத்தை இங்கே எழுதினேன் என்றால் படிப்பவர் கண்களிலிருந்து ரத்தமே வடிந்து விடும் !!! இறுதியாக நண்பர்களே ! மலேசிய இந்திய அரசியல் வாதிகளால் ஏமாந்தோர் சங்கம் என்று ஒன்று திறக்க ஆசைப்படுகிறேன் , எங்கே , ஆதரவு கொடுப்பவர்கள் கையை உயர்த்துங்கள் !!!!!!
TAPAH பாலாஜி, உங்கள் கருத்தில் மாற்று கருத்து எனக்கு இல்லை. மா இ கா வால் தான் இவ்வளவு அநியாயமும் அரங்கேறியது ….. TAFE கல்லூரியால் 24,000 மாணவர்களுக்கும் மேல் பாதிக்க பட்டுள்ளார்கள். அரசாங்க அங்கீகாரம் கிடைக்காமல். ஒருவர் கூட வரவில்லை பொது நல வழக்கு தொடர வரவில்லை …. நான் மட்டுமே போராடி, தோல்வி கண்டேன். இன்று அந்த கல்லூரி நஷ்டத்தில் ஓடுகிறது …. ஏமாப்பற்றவர்கள், ஏமாளிகளாகவே வாழ பழகி கொண்டார்கள் ….
dilip2 உங்கள் பொது நல தொண்டு பாராட்டுக்குரியது. வாழ்க.
DHILIP 2 ! உங்களைப்போன்று பொதுநலத்தில் சுயநலம் அல்லாமல் சாதிக்க நினைத்தவர்கள் பலர் , எனோ தெரியவில்லை இந்த சமூகத்தில் எடுபடாமல் போனதுதான் நமது துரதிஷ்ட்டம் ! கடந்தகாலத்தில் எங்கள் ஊர் KTM நிலத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது . பழைய ஆலய கட்டிடத்தில் எந்த புதுப்பித்தல் வேலையும் KTM நிர்வாகத்துக்கு தெரியாமல் செய்யக்கூடாது என்று ஏற்கனவே ஆலய நிர்வாகம் எச்சரிக்க பட்டுள்ளதாலும், எந்தஒரு காரணத்தினாலும் அந்த நிலம் ஆலய நிர்வாகத்துக்கு சொந்தமாக்க முடியாது என்று KTM நிர்வாகம் எங்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருந்ததாலும், நானும் என் நண்பர்களுமாக ஆலய நிர்வாகத்துக்கு எடுத்துச்சொல்லியும், அவர்கள் ஆலய வைப்புத்தொகை கிட்ட தட்ட 80 ஆயிரம் வெள்ளியை பயன்படுத்தி கும்பாபிஷேகம் செய்வதில் குறியாக இருந்தார்கள் ! ஆலய தலைவர் ஒரு ம இ கா கிளையின் தலைவராக இருந்ததால் , இது குறித்து சாமிவேலுவிடம் சொல்லியும் பயனற்று போனது . அதன் பிறகு வேறு வழிதெரியாமல் நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கி வழக்கில் நாங்கள் தோற்றுப்போனதால் , ஆலய பணம் 80 ஆயிரம் வெள்ளியை காப்பாற்ற போய், நானும் என் நண்பருமாக 40 ஆயிரம் வெள்ளியை இழந்து , பெண்டாட்டி பிள்ளைகளிடம் துப்பு வாங்கி முகம் நனைந்ததுதான் மிச்சம் !!!
நண்பன் சோரம் போனது. அதில் தர்மம் என்பது கிடையாது, சில நல்ல ஆசிரியர்கள் உள்ளார்கள், அவர்கள் வயிற்று பிழைப்பிக்கு மாரடிப்பவர்கள். பாவம். எழுதுவது பொய் என்றும் தெரிந்தும் எழுதும் போது இவர்களும் கேவலமாக போய் விடுகிறார்கள். இவர்கள் தமிழை வைத்து தமிழனைக்கொல்லும் புறம்போக்குகள்.
கடவுள்தான் நல்லவர்களை காப்பாற்ற வேண்டும்….. TAPAH BALAJI நீங்கள் என் மதிப்பிற்குரியவர். உங்களால் நான் பெருமை அடைகிறான். தொடருங்கள் உங்கள் பொது நல தொண்டுகளை. நாம் உழைப்பது மானுட குலத்திற்கு …. தனிநபருக்கு அல்ல …