இஸ்மாயில் சப்ரி: பினாங்கை ஆளும் அதிகாரத்தை மீண்டும் பிஎன்னுக்கே தாருங்கள்

sabriபினாங்கு   வாக்காளர்கள்,  டிஏபி   அதன்   எட்டாண்டுக்கால   ஆட்சியில்    எழுந்த   பல  பிரச்னைகளுக்குத்  தீர்வுகாணவில்லை     என்பதால்  பினாங்கை  ஆளும்   அதிகாரத்தை    மீண்டும்  பிஎன்னுக்கே    தர   வேண்டும் .

டிஏபி   அதன்  தேர்தல்    அறிக்கையில்  கூறிய   வாக்குறுதிகளை    நிறைவேற்றத்   தவறிவிட்டது    என்று     அம்னோ  உச்சமன்ற    உறுப்பினர்   இஸ்மாயில்    சப்ரி   யாக்கூப்     கூறினார்.

சாலைக்   கட்டணத்தை  அகற்றப்போவதாகவும்    புதிய  பாலம்   கட்டப்போவதாகவும்   சொல்லியதெல்லாம்   வெறும்  தேர்தல்    வாக்குறுதிகள்தான்.  எதுவுமே  நிறைவேற்றப்படவில்லை    என்றாரவர்.

“டிஏபி-இன்  பொய்களை  இன்னும்   உணர்ந்து  கொள்ளாமல்   இருந்தோமானால்   நமக்கு   அல்லது   பினாங்குக்கு   பிரச்னைதான்…….. வாக்குறுதிகள்    எதுவுமே  நிறைவேற்றப்படவில்லை.  வாக்குகள்  கிடைக்க  வேண்டும்  என்பதற்காக   சொல்லியிருக்கிறார்கள்”,  என்று   புறநகர்,   வட்டார  மேம்பாட்டு   அமைச்சருமான   இஸ்மாயில்   சப்ரி   நேற்றிரவு   பினாங்கில்   தெரிவித்தார்.