அமெரிக்காவுடன் பரஸ்பரம் சட்ட உதவி நாடப்படுவதாகக் கூறப்படுவதை ஐஜிபி மறுக்கிறார்

polisமலேசிய   போலீஸ்   1எம்டிபி    வெளிநாட்டில்  உள்ள    சாட்சிகளைச்    சந்திப்பதற்கு    அமெரிக்க   உதவியை   நாடுவதாகக்  கூறப்படுவதை    இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்   அபு  பக்கார்    மறுத்தார்.

இதன்  தொடர்பில்   நேற்று   ஊடகங்களில்   தவறான    செய்திகள்   வெளிவந்திருப்பதாக    காலிட்   கூறினார்.

“அது  பொய்,  அப்படி    நான்   சொல்லவில்லை…….வெளிநாடுகளில்    விசாரணை    செய்வதாக    இருந்தால்    அது    எப்படிச்    செய்யப்படும்   என்பதை   விளக்கி   இருந்தேன்,   அவ்வளவுதான்”,என்றாரவர்.

வெளிநாட்டுச்   சாட்சிகளிடம்   வாக்குமூலம்   பதிவு    செய்வதாக   இருந்தால்  அதற்கெனவுள்ள   அனைத்துலக   நடைமுறைகளும்   பரஸ்பர    சட்ட  உதவிக்கான   விதிமுறைகளும்   சட்டத்துறைத்    தலைவர்   அலுவலகத்தின்   மேற்பார்வையில்  பின்பற்றப்படும்  என்று   காலிட்   நேற்று     அறிக்கை  ஒன்றில்  கூறினார்.

1எம்டிபி  மீதான  விசாரணையில்   போலீஸ்   திருப்தி   கொள்வதாகவும்    இயன்ற   விரைவில்    அது   முடிவுக்கு  வரும்  என்று    நம்புவதாகவும்       ஐஜிபி    கூறினார்.

விசாரணை  இன்னும்  முடியவில்லை   யாரும்    அதன்மீது   கருத்துரைக்கக்  கூடாது  என்று    காலிட்    வலியுறுத்தினார்.  அது  விசாரணைக்குப்   பாதகமாக   அமையலாம்.