வாக்காளர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையினர் ஆளும் கட்சிக்கு எதிராக திரும்பினால் பிஎன்னிடமிருந்து 45 நாடாளுமன்ற இடங்களைக் எதிரணி கைப்பற்ற முடியும் என்கிறார் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின்.
பிஎன் 67 இடங்களை எதிரணியிடம் இழக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் நினைக்கிறார்.
“இவற்றில் பெரும்பாலானவை அம்னோ வைத்துள்ள இடங்களாகும்”, என முகைதின் நேற்றிரவு சாபாக் பெர்ணத்தில் பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த 1எம்டிபி- எதிர்ப்புக் கூட்டத்தில் கூறினார்.
அம்னோவிலிருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பார்டி பிரிபூமி பெர்சத்து (பெர்சத்து) கட்சியின் இடைக்காலத் தலைவரான முகைதின், எதிரணி ஒன்றுபட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இனி வரும் தேர்தல்களில் பிஎன்னுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அவ்விடங்களில் அதிகமாகப் பணம் பட்டுவாடா செய்தால் வெற்றி தே.மு. – கே!