லங்காவி கழுகுச் சின்னம் உடைக்கப்படும்? கெடா அரசு பாட்வா மன்றத்தின் ஆலோசனையை நாடும்

langலங்காவின்   கழுகுச்  சதுக்கத்தில்  உள்ள   புகழ்பெற்ற  கழுகுச்  சின்னத்தை  உடைக்க    வேண்டும்     என்று  கோரிக்கைகள்  எழுமானால்    கெடா   அரசு   மாநில  பாட்வா   மன்றத்துடன்   ஆலோசனை  கலக்கும்    எனறு   கெடா  துணை  முப்தி   ஷேக்  மார்வாஸி  ஜியாவுடின்    கூறினார்.

அக்கழுகுச்  சிலை  “ஹராம்”  என்றும்   அதை  உடைத்தெறிய   வேண்டும்  என்றும்   பேரா  முப்தி  ஜம்ரி   ஹாஷிம்   கூறியதாக   பெரித்தா  ஹரியான்  அறிவித்திருப்பது    பற்றிக்   கருத்துரைத்தபோது    அவர்  இவ்வாறு   கூறினார்.

1996-இல்,  கழுகுச்  சிலை   அமைக்கப்பட்டபோது   கெடா இஸ்லாமிய    அதிகாரிகளிடம்   ஆலோசனை  கலக்கப்படவில்லை  என  மார்வாஸி   கூறினார்.

“இஸ்லாமிய   சட்டப்படி    அது  ஹராமானது    என்பதை   அனைவரும்   அறிவர்.  ஆனால்,  அது  கட்டி  முடிக்கப்பட்டு  விட்டது.

“இப்போது  அதை  உடைக்க   வேண்டுமானால்    முதலில்  விவாதிக்கப்பட   வேண்டும்..  விவாதிக்கப்படுவதை  வெளியில்    சொல்ல  முடியாது.  சொன்னால்  வேறு  விதமாக    கதை   கட்டி  விடுவார்கள்”,  என்றாரவர்.