இராஜபக்சே, நாட்டைவிட்டு வெளியேறு!; போர்க்குற்ற விசாரணை உடனே தொடங்கப்பட வேண்டும்!!

– சிவராஜன் ஆறுமுகம், பொதுச் செயலாளர், மலேசிய சோசலிசக் கட்சி

10Mahinda-Rajapakse-lஇலங்கையின் முன்னாள் அதிபர்,  போர்க் குற்றவாளி இராஜபக்‌சேயை  எதிர்த்து தக்க நடவடிக்கை எடுக்க முடியாத மலேசிய அரசை மலேசிய சோசலிசக் கட்சி கண்டிக்கிறது. புத்ரா உலக வாணிப மையத்தில் (PWTC) செப்டம்பர் 1 முதல் 4ஆம் தேதி வரையில், ஆசியப் பசிபிக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்க (ICAPPMU) அனைத்துலக    மாநாட்டில் கலந்துகொள்ள இராஜபக்சே மலேசியா வந்துள்ளார்.

ஐநா சபையில், பன்னாட்டு விசாரணைக் குழுவின் ஒத்துழைப்புடன், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்  குற்றங்களை விசாரிக்க, இலங்கை அரசு மீது தீர்மானம் நிறைவேற்றியும், புத்ரா ஜெயா இராஜபக்‌சேயின் குருதி படிந்த சரித்திரத்தைப் புறந்தள்ளியிருப்பது   வருத்தமளிக்கிறது.

2009-ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில், இராஜபக்‌சே தலைமையில் நடந்துள்ளதாக கிடைத்துள்ள ஆதாரப்பூர்வ குற்றச்சாட்டுகளுக்கு  அனைத்துலக சமூகத்திடம் அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

PSMSivarasan1மே 2009 இல், ஐநா மனித உரிமை ஆணையம் (UNHRC) இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. மீண்டும், 2010-ல் , ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூன் ‘மூன்று நபர் குழு’ ஒன்றை, இராஜபக்‌சே அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க நியமித்தார். விசாரணையில் “ஆதாரப்பூர்வக் குற்றச்சாட்டு”களை அக்குழு கண்டறிந்தது. இலங்கை அரசும் இராணுவமும் இணைந்து ஏவுகணைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொன்றுக் குவித்தது; மேலும், மருத்துவமனைகள் மற்றும் இன்னும் பிற பொதுமக்கள் கூடும் கட்டிடங்களும் அவர்களின் ஏவுகணைத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. போரில் சிக்கிக்கொண்ட பொதுமக்களுக்கானப் பாதுகாப்பையோ உதவியையோ  அரசு உறுதிசெய்யவில்லை. பொதுமக்கள் மற்றும் புலிகளின் மனித உரிமை1psm மீறப்பட்டுள்ளது, அது பாதுகாப்பு வளையமாக இருப்பினும் கூட.

இவற்றுக்கெதிராக குரல் கொடுக்கும் அனைத்துலக சமூகத்தின் குரலுக்கு மதிப்பளிக்காமல் இராஜபக்‌சேயிக்கு நேசக்கரம் நீட்டி, மலேசிய அரசு  அழைத்திருப்பதைக் கண்டு பி.எஸ்.எம். வெட்கித் தலைகுனிகிறது.

புத்ரா ஜெயா இம்மாதிரியான போர்க் குற்றங்களை அங்கீகரிக்கிறதா? அல்லது  அவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா என்பதை விளக்க வேண்டும். புத்ராஜெயாவில் இருக்கும் தலைமைக்கு இராஜபக்‌சேயையும் இலங்கையையும் எதிர்த்து தீர்க்கமான முடிவு எடுக்க தைரியமில்லை என்பதை இச்செயல் காட்டியிருக்கிறது.

ஆக, மலேசிய சோசலிசக் கட்சி இராஜபக்‌சேயை நாட்டைவிட்டு உடனே வெளியேற்றுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது. இலங்கைத் தமிழர்கள் மீது நடந்த போர்க் குற்றங்களை மலேசிய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இராஜபக்சே,  நாட்டைவிட்டு வெளியேறு!

போர்க் குற்ற விசாரணை உடனே தொடங்கப்பட வேண்டும்!!