தேசிய நினைவுச் சின்ன(துகு நெகரா)த்தைச் சுற்றியுள்ள 66ஏக்கர் நிலப்பரப்பை ரிம650 மில்லியன் செலவில் பச்சைப் பசுஞ் சோலையாக மாற்றும் அரசாங்கத் திட்டம் தேவையற்றது எனக் குறைகூறப்பட்டிருக்கிறது.
நாடும் மக்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதாக பாஸ் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பகுதித் தலைவர் கைரில் நிஜாம் கைருடின் கூறினார்.
“பாஸ் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பகுதி கோலாலும்பூரைப் பசுமைப்படுத்தும் திட்டத்தை நிராகரிக்கவில்லை, ஆனால், இந்த நேரத்தில் அத்திட்டம் தேவையில்லையே என்றுதான் கருதுகிறது.
“அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அதைவிட முக்கியமான மக்களின் அவசரத் தேவைகள நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்”, என்று கைரில் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.