காஜாங் சிறை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள ஒரு நாள் அதில் தங்கியிருக்க வருமாறு உள்துறை துணை அமைச்சர் விடுத்த ‘அழைப்பை’ பாடாங் செறாய் எம்பி என். சுரேந்திரன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
“இந்த வாய்ப்பை அளித்த அமைச்சருக்கு பொதுநலனைக் கருத்தில் கொண்டு நன்றி தெரிவிக்கிறேன்.
“உள்துறை துணை அமைச்சர் என்ற முறையில் நூர் ஜஸ்லான் அதிகாரப்பூர்வமாக அனுமதி கொடுத்தால் காஜாங் சிறையில் கைதிகள் போலவே தங்கியிருந்து அங்குள்ள நிலவரத்தை மதிப்பிட நான் தயார்”, என்று சுரேந்திரன் ஓர் அறிக்கையில் கூறினார்.
சிறைகளில் எலிகளையும் கரப்பான் பூச்சிகளை, கொசுக்களையும் நிரப்பி வைக்க வேண்டும் என்று முன்னாள் முறையீட்டு நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லா முன்வைத்த ஒரு கருத்தை நூர் ஜஸ்லான் ஆதரித்தபோது அதை சுரேந்திரன் கண்டித்திருந்தார். சிறைச்சாலை நிலவரங்களையும் சாடியிருந்தார்.
அப்போதுதான் நூர் ஜஸ்லான், சுரேந்திரன் மலேசிய சிறைகளில் தங்க வேண்டும் அங்குள்ள நிலவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் அதன்பின் அதை இவ்வட்டாரத்தில் உள்ள மற்ற சிறைகளுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.
நல்லது. பாடாங் செறாய் எம்பி என் சுரேந்திரன்.
சொல்லிவிட்டுப் போனால் அது சிறையாக இருக்காது! சொல்லாமல் போனால் தான் அது சிறையாக இருக்கும்!
ராஜ பக்சே, கூட்டத்தில் கலந்து கொண்ட இடத்தில் ஒரு கல்லை தூக்கி எறிந்திருந்தாலும், உம்மை தூக்கிக் கொண்டு போய் சிறையில் வைத்திருப்பார்கள். அதே விட்டுப்புட்டு, நல்லா பேசக் கத்துக்கிட்டானுங்க.