‘அமைச்சர்களுடன் நடனமாடும்’ ஏஜி பதவி விலக நெருக்குதல்

agசட்டத்துறைத்    தலைவர்   (ஏஜி)  முகம்மட்  அபாண்டி  அலி,  கடந்த   வாரம்  தேசிய  நாள்  கொண்டாட்டத்தின்போது     அமைச்சர்களுடன்    நடனமாடுவதைக்  காண்பிக்கும்   காணொளி    தொடர்பில்  பதவி   விலக  வேண்டும்    என்று  கோரிக்கை   விடுக்கப்பட்டுள்ளது.

ஏஜி   ஆளும்  கட்சித்   தலைவர்களுடன்   நெருங்கிப்  பழகுவது   அவரின்  நடுவுநிலையைச்  சந்தேகப்பட    வைக்கிறது    என  அவரைக்  குறைகூறுவோர்   கூறுகின்றனர்.

அம்னோ   பத்து  கவான்   தொகுதி   முன்னாள்    உதவித்    தலைவர்    கைருடின்   அபு  ஹாசான்,     அபாண்டி   24-மணி  நேரத்தில்   பணி  விலக   வேண்டும்  என்று   கோரும்  மகஜர்  ஒன்றைச்   சட்டத்துறைத்    தலைவர்   அலுவலகத்திடம்   கொடுத்தார்.

“நீங்கள்(அபாண்டி)   (24-மணி   நேரத்தில்)   விலகத்  தவறினால்,   உங்களைச்   சட்டத்துறைத்   தலைவர்   பதவியிலிருந்து  வெளியேற்ற   சட்டப்படி   நடவடிக்கைகள்   எடுப்போம்”,  என்று  தம்  மகஜரில்  குறிப்பிட்டிருப்பதை   கைருடின்   புத்ரா  ஜெயாவில்,  ஏஜி   அலுவலகத்துக்கு  வெளியில்  செய்தியாளர்களுக்குப்  படித்துக்  காண்பித்தார்.

ஆனால்,  என்ன   நடவடிக்கைகள்    எடுக்கப்படும்   என்பதைத்  தெரிவிக்க    மறுத்தார்.  அடுத்தடுத்து     நடக்கும்      செய்தியாளர்   கூட்டங்களில்   தெரிவிக்கப்படும்   என்றார்.