முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்குடன் சேர்ந்து பணியாற்றும் தம்மால் தம்முடைய முன்னாள் எதிரியான அன்வார் இப்ராகிமுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றுதான் நினைக்கிறார்.
அன்வாரைச் சந்தித்தபோது புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவுடன் ஒத்துழைப்பது குறித்து அவருடன் விவாதிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் மகாதிரிடம் வினவினார்கள்.
“நான் அது குறித்து பேசவில்லை, ஆனால் கிட் சியாங்குடன் இணைந்து செயல்படும்போது அன்வாருடன் சேர்ந்து பணியாற்ற முடியாதா?”, என்றவர் திருப்பிக் கேட்டார்.
அண்மையில், அன்வார் ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றம் வந்தபோது மகாதிர் அங்கு சென்று அவரைச் சந்தித்தது பெரும் வியப்பைத் தந்தது.
ஏனென்றால், 1998-இல் அன்வாரைத் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது முதல் முன்னாள் பிரதமர் அவர்மீது தொடர்ந்து குறை சொல்லி வந்துள்ளார்.
மகாதிர்- அன்வார் சந்திப்பை ஏதோ இந்தி திரைப்படம் பார்ப்பதுபோல் இருந்தது என அம்னோ சிலாங்கூர் தலைவர் நோ ஒமார் நேற்று கேலி செய்திருந்தார்.
புதிய தேசிய முன்னணி ஒன்று துவங்கப் போகிறது. போட்டி ம.இ.க. தரப்பும் புதிய கட்சி ஒன்றை துவங்க இருப்பதாகத் தகவல். அதனைத் துணைப் பிரதமர் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக பட்சி ஒன்று சொல்லி விட்டுப் போகுது.
வாழ்த்துக்கள் ……அரசியலில் இதுவெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா ….எங்கள் கொவுண்டமணி வாக்கு …தெய்வ வாக்கு ….