மார்ச்சில் 14வது பொதுத் தேர்தல்?

najib14வது  பொதுத்   தேர்தல்  அடுத்த   ஆண்டு   மார்ச்  மாதம்   நடத்தப்படலாம்  என  புளும்பெர்க்   செய்தி  ஒன்று  கூறுகிறது.

அது  இரண்டு   அம்னோ    தலைவர்களை   மேற்கோள்   காட்டி   அவ்வாறு  கூறியது.  அவர்களின்  பெயர்களை   அது   தெரிவிக்கவில்லை.

“மார்ச்சில்   நடத்தலாம்   என்று  பேசப்பட்டிருக்கிறது……..ஏன்  கூடாது?   எதிரணி   ஒன்றாக  இல்லை..   நாங்கள்  தேர்தலுக்குத்   தயாராகி  விட்டோம்”, என்று    தெற்கு  மாநில   அம்னோ   தலைவர்    கூறியதாக  அச்செய்தி   குறிப்பிட்டது.

வாக்காளர்களை,  குறிப்பாக   இளம்  வாக்காளர்களைச்  சந்திக்குமாறு   கட்சி  மேலிடம்     அறிவுறுத்தியிருப்பதாக  அவர்கள்  தெரிவித்திருக்கிறார்கள்.

கெராக்கான்   உதவித்   தலைவர்   டொமினிக்  லாவும்   “தேர்தலுக்குத்   தயாராகு”மாறு    தம்  கட்சிக்குக்   கூறப்பட்டிருப்பதாகக்  கூறினாராம்.

“கட்சி  இயந்திரத்தை   ஒழுங்குபடுத்தித்   தேர்தலுக்குத்    தயாராகுமாறு    பிஎன்  எங்களுக்குக்   கூறியுள்ளது”,  என்றவர்  சொன்னதாக  ப்ளூம்பெர்க்   கூறியது.

ஆனாலும்,  தேர்தல்  தேதியை   முடிவு  செய்பவர்   பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்தான்   என்றும்   அவருக்குத்தான்   அந்த  அதிகாரம்  உண்டு  என்றும்   லாவ்  கூறினார்.