முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் அம்னோவின் படகை மூழ்கடிக்க முனைவதால், அவர் அப்படிச் செய்வதற்கு முன்பதாக நாம் அவரது படகை அழித்து தண்ணீரிலிருந்து அகற்ற வேண்டும் என்று அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் கட்சியின் உறுப்பினர்களிடம் கூறியதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.
மகாதிர் நாட்டிற்கு பெரும் மேம்பாடுகளைம் கொண்டு வந்தார் என்பதை மறுக்க முடியாது என்று கூறிய இஸ்மாயில் சாப்ரி, ஆனால் அவர் இப்போது கட்சியில் இல்லை என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும் என்றார்.
அவர் இப்போது வேறொரு படகில் இருக்கிறார். அவர் நமது படகிற்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை.
அவர் நமது படகில் ஓட்டை போடுவதற்கு முன்பு நாம் அவரது படகை மூழ்கடிப்பது சிறப்பாகும் என்று குவாந்தான் அம்னோ தொகுதி பேராளர்கள் கூட்டத்தை இன்று தொடக்கி வைத்து பேசிய போது சாப்ரி கூறினார்.
குவாந்தான் அம்னோ தொகுதி தலைவர் வான் அட்னான் வான் மாமாட்டும் உடனிருந்தார்.
யார் மூழ்கிக் கொண்டிருப்பது என்பதை அறியாமல் உளறுகின்றார் இவர். பாவம். அடுத்த தேர்தலோடு இவர் அவுட் என்பதை அறியாதவர்.
படகை ஓட்டை போட்டால் படகுதான் மூழ்கும் அதில் பயணிப்பவர்கள் “LIFE RAFT” மூலமாக தப்பித்து கொள்ள வாய்ப்பு உண்டல்லவா ? ஆகவே C4 வெடிமருந்தை (உங்கள் பாஷையில் வானவேடிக்கையை) பயன்படுத்தினால் படகை ஓட்டை போடும் நேரத்தை மிச்ச படுத்திய மாதிரியும் இருக்கும் படகையும் அதில் பயணிப்பவர்களும் சிதைந்து போனது மாதிரியும் இருக்கும் அல்லவா ?
அல்தான்துயா அனுபவம் கைகொடுக்கும் என திடமாக நம்புங்கள் வெற்றி காணலாம் அமைச்சரே !
இது தான் உண்மையான உம்னோவின் உருவம். இன்று மலேசிய இந்தியர்களை சுக்கு நூறாக உடைத்தது யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.