அமெரிக்க நாளேடான வால் ஸ்திரிட் ஜர்னல் (டபள்யுஎஸ்ஜே) பேசாமல் மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களின் பட்டியல் ஒன்றை வெளியிடலாம் என்று கிண்டல் செய்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்.
அந்த அளவுக்கு டபள்யுஎஸ்ஜே மலேசிய அரசியல் விவகாரங்களில் அக்கறை கொண்டிருக்கிறது என்றாரவர்.
“அது நம்பகமான அல்லது சுதந்திரமாக செயல்படும் ஊடகம்போல் தெரியவில்லை, அரசியல்வாதிகள்போல் நடந்து கொள்கிறது”, என்றவர் அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார்.
டபள்யுஎஸ்ஜே செய்திகளில் புதிதாக எதுவும் இல்லை. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
குருமுட்டை!
சின்னப்பையன் சொல்றான் .– அறிஞர் மேதை –. நாட்டை நிர்வாகம் செய்ய இவனை போன்ற அறிவாளிகள் இன்னும் நிறைய பேர் உள்ளனர் ///???
இவனை போன்ற அறிவாளிகள் நாட்டுக்கு தேவை .
மக்கள் சுரண்டப்படுவதை கண்டும்,அறிந்தும்,தெரிந்தும், தெரியாததுபோல் நடித்து,பதவிக்காக , மானத்தை, தன்மானம் இழக்கும் அமைச்சர் வேண்டும், வேண்டாமை என்பதை வரும் பொது தேர்தலில் மக்கள் தேர்வுசெய்திடவேண்டும் .
இப்படிப்பட்ட அறிவாளிகள் தான் அம்னோவை வழி நடத்திக்கொண்டிருக்கின்றனர். எல்லாமே அப்பட்டம்- யாருக்கும் அக்கறை இல்லை– எதிர் கட்சிகள் என்ன சத்தம் போட்டாலும் இவர்கள் காதில் விழாது. மக்களுக்கு யார் ஆண்டால் என்ன?
மட சாம்பிராணி நம்பர் ஒன் . நம் நாட்டில் பதிவு பெறாத ஓர் அமைப்பு எப்படி தேர்தலில் போட்டி போட முடியும்? இது தெரியாத இது போன்ற கூஜா தூக்கிகள் நிறைய உண்டு நாட்டில் .