1976 சட்டச் சீரமைப்பு (திருமணம், மணவிலக்கு) சட்டத்துக்கு அரசாங்கம் கொண்டு வரவுள்ள திருத்தங்களுக்கு ஒப்புதல் கொடுத்திருப்பதாகக் கூறப்படுவதை மலேசிய பெளத்தம், கிறிஸ்துவம், இந்து சமயம், சீக்கிய சமயம் , தாவோயிச ஆலோசனை மன்றம் (எம்சிசிபிசிஎச்எஸ்டி) மறுத்துள்ளது.
அச்சட்ட முன்வரைவு நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் உத்தேச திருத்தங்களுக்கு எம்சிசிபிசிஎச்எஸ்டி ஒப்புதல் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுவதாக அனைத்து சமய அமைப்பின் துணைத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷண் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிறார்களைத் தன்மூப்பாக மதம் மாற்றுவதால் எழுகின்ற தகராறுகளுக்குத் தீர்வு காண்பதற்காக அச்சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், உத்தேச திருத்தங்களை எம்சிசிபிசிஎச்எஸ்டி இன்னும் கண்ணால் காணவே இல்லை என்றாரவர்.
“இன்றுவரை, சட்டத்திருத்த முன்வரைவைப் பார்க்கவே இல்லை. சட்டவரைவைப் பார்க்காமல் ஒப்புக்கொள்ள முடியாது”, என்றவர் கூறினார்.
அய்யா சட்டத்திருத்த மசோதாவை பார்க்காமல் யாரும் ஒப்புக் கொள்ள வேண்டாம். பிறகு நாம்தான் அவதிப்படவேண்டும்.அவனுங்க சொல்லுவானுங்க நீங்க எல்லோரும் சொல்லியப்படிதான் செய்திருக்கின்றோம் என்று ஏமாந்திட வேண்டாம்.
அன்பார்ந்த செம்பருத்தி.கோம் ஆசிரியர் குழுவினர் கவனத்திற்கு
திருமணம், மணவிலக்கு தொடர்பான, 1976-ஆம் ஆண்டு சட்டத்தின் 164-ஆவது பிரிவை திருத்தம் செய்ய அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரை பற்றி இருவர் மட்டுமே ஆக்க பூர்வமான கருத்தினை தெரிவித்துள்ளனர். நம்மிடையே பல சட்ட வல்லுனர் இருப்பினும் யாரும் பயனுள்ள கருத்துகளை எழுதவில்லை. 1976 ஆம் ஆண்டே இந்த விவகாரத்திற்கு நல்ல தீர்வு கண்டிருக்க வேண்டும். சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் இந்த விவகாரத்திற்கு நல்ல முடிவு கிடைக்குமா?
மலேசியாவில் பல சட்ட வல்லுனர், மதம் சார்ந்த அமைப்புகளும் இருப்பினும் ஆக், 25ம் தேதி பிரதமரின் அறிவிப்புக்கு பின் இருவர் மட்டுமே ஆக்க பூர்வமான கருத்தினை தெரிவித்துள்ளனர். ஒருவர் மாண்புமிகு எம். குலசேகரன் மற்றவர் G25 அமைப்பாகும். அவர்களின் கட்டுரைகளை கீழே தந்துள்ளேன். அதோடு இந்த விவகாரம் குறித்த நமது தலைவர்களின் கருத்துகளையும் தனித்தனியே தந்துள்ளேன். செம்பருத்தி.கோம் ஆசிரியர் குழுவினர் அதனை கத்தரிக்காமல் வெளியீட கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக இந்த விவகாரம் குறித்த எனது கருத்தையும் தந்துள்ளேன் கத்தரிக்காமல் வெளியீட கேட்டுக்கொள்கிறேன்.
1. Proposed amendments to Law Reform Act should involve the input and feedback from all stakeholders – -M. Kulasegaran, Member of Parliament, August 26, 2016. ( http://www.semparuthi.com/?p=137529 )[ As a Member of Parliament, I am unaware of the proposed amendments that will be tabled. To ensure that the amendments will satisfactorily resolve the long standing disputes, issues and problems, I suggest the draft laws be widely circulated among stake holders like MPs, NGOs and the Bar Council. By this manner a more detailed study and feedback could be obtained for a thorough and fair amendments to meet the aspirations of those caught by this saga and that the issue which has caused so much hardship to Indira and others could be addressed once and for all.]
2. G25 welcomes proposed amendments to marriage and divorce law reform — G25 Secretariat Sunday August 28, 2016
06:57 PM GMT+8 – See more at: http://www.themalaymailonline.com/what-you-think/article/g25-welcomes-proposed-amendments-to-marriage-and-divorce-law-reform-g25-sec#sthash.CHZ2t8FN.dpuf
[Our objection to the idea of unilateral conversion of minors to Islam, is that, besides being unfair to non-Muslims, it entrenches inequalities in Malaysia and does so in the name of Islam. It implies that a Muslim parent, even if newly converted, has more rights than a non-Muslim parent. This is contrary to Article 8 of the Federal Constitution which guarantees that all persons are equal before the law and entitled to the equal protection of the law. This article further provides that there shall be no discrimination against citizens on the grounds only of religion, race, descent, place of birth or gender, in any law. – See more at: http://www.themalaymailonline.com/what-you-think/article/g25-welcomes-proposed-amendments-to-marriage-and-divorce-law-reform-g25-sec#sthash.CHZ2t8FN.dpuf%5D
3. Prime Minister should follow NS’ lead in the matter of “Divorce first, then Convert” Saturday, February 7, 2015, 17:17 -M. Kulasegaran, MP, February 7, 2015. The Prime Minister should take the lead and advise the respective states to enact a similar “divorce first, then convert” law proposed by Negri Sembilan government. It is most heartening to note the proposed rules that Negeri…
– http://www.semparuthi.com/?p=119169
ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம்
மலேசிய நண்பன் ஆக 28
திருமணம், விவாகரத்து சட்ட திருத்தம்;
பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். – ம.இ.கா நம்பிக்கை
கோலாலம்பூர், ஆக 28
மத மாற்றம் காரணமாக பிள்ளைகள் பராமரிப்பு விவகாரத்தில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் வரும் அக்டோபர் மாத நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திருமணம், விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்திருப்பதை ம.இ.கா வரவேற்கிறது.
இச்சட்ட திருத்தம் மீதிலான பரிந்துரைகள் காலதாமதமாக செய்யப்பட்டாலும், சிவில் திருமணங்களில் ஒருவர் இஸ்லாத்திற்கு மதம் மாறும் போது எழக்கூடிய சட்ட சர்ச்சைகளுக்கு இது முடிவு கட்டும் என தாம் நம்புவதாக ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் கூறினார்.
இச்சட்ட திருத்தத்தின் வழி, நீண்ட காலம் நிலவி வந்துள்ள குழப்பங்களுக்கு, சம்பந்தப்பட்ட குடும்பங்களின் மன உளைச்சல்களுக்கும் தீர்வு காணப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பல் வேறு சந்தர்ப்பங்களில் நான் இது பற்றி அமைச்சரவையில் கேள்வி எழுப்பியிருக்கிறேன்.
சட்டத்துறை தலைவரை தனிப்பட்ட முறையில் சந்தித்தும் இது பற்றி பேசி, பரிந்துரைகள் வழங்கியிருக்கிறேன் என்று சுப்பிரமணியம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
1976-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட திருமண மற்றும் மணவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற பிரதமரின் பரிந்துரை சரியான தருணத்தில் வெளியிடப்பட்ட ஒன்றென கருதப்படுகிறது.
ம.இ.கா. தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ். கே தேவமணி
மலேசிய நண்பன் ஆக 28
திருமணம், சட்ட திருத்தம்;
ம.இ.கா வரவேற்கிறது
கோலாலம்பூர், ஆக 28
திருமணம், மணவிலக்கு தொடர்பான, 1976-ஆம் ஆண்டு சட்டத்தின் 164-ஆவது பிரிவை திருத்தம் செய்ய அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரையை ம.இ.கா வரவேற்கிறது
ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் அது தொடர்பாக அமைச்சரவையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார் என கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ். கே தேவமணி கூறினார்.
சிவில் முறையில் பதிவு செய்யப்பட்ட திருமணத்தின் மணவிலக்கு தொடர்பான பிரச்சினைகள் சிவில் நீதி மன்றத்திலேயே தீர்க்கப்பட வேண்டும் என்ற அம்சம் அந்த பரிந்துரையில் இடம் பெற்றுள்ளது..
அதில் செய்யப்படும் மாற்றம், கணவர் அல்லது மனைவி இஸ்லாத்தை தழுவும் போது எழும் சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் என நம்ப்பபடுவதாக பிரதமர் துறை துணை அமைச்சருமான தேவமணி குறிப்பிட்டார்.
1976-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட திருமண மற்றும் மணவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற பிரதமரின் பரிந்துரை சரியான தருணத்தில் வெளியிடப்பட்ட ஒன்றென கருதப்படுகிறது
நஸ்ரியின் உத்தரவாதம்;
சமய அமைப்பு வரவேற்பு
மலேசிய நண்பன் 4-9-2016
கோலாலம்பூர், செப். 4- திருமணம் / விவாகரத்துச் சட்ட (1978) சீரமைப்பில் கொண்டு வரப்படும் திருத்தங்களால் தன்மூப்பான மதமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சுற்றுலா, பண்பாட்டு துறை அமைச்சர் கூறியிருப்பதை மலேசிய பெளத்த, கிறிஸ்துவ, இந்து, தாவோயிச ஆலோசனை மன்றம் வரவேற்றுள்ளது.
சிறார் மதமாற்றம் கூடாது என்பதே இம்மன்றத்தின் நிலைப்பாடாகும்.
சிறிய வயதிலான தங்கள் பிள்ளையை மதமாற்றம் செய்ய வேண்டுமானல் மணவாழ்க்கையில் இணைந்த இருவரும் சம்மதிக்க வேண்டும், என அனைத்துச் சமய அமைப்பின் உதவித் தலைவர் ஜாகிர் சிங் கூறினார்.
இது 2009, ஏப்ரலில் அமைச்சரவை எடுத்த முடிவுக்கும் ஏற்புடையதாகும் என அந்த அமைப்பு தெரிவித்தது. அப்போதைய அமைச்சரவை சிவில் திருமணத்தில் பிறந்த ஒரு பிள்ளையை மதம் மாற்ற பெற்றோர் இருவரின் சம்மதமும் தேவை என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த அமைச்சரவை முடிவு பின்பற்றப்படும் என 2009-க்குப் பின்னர் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறையாகும் என ஜாகிர் கூறினார்.
மதமாற்றம் விவகாரத்திற்கு விடியல்
மலேசிய நண்பன் 4-9-2016
பெட்டாலிங் ஜெயா, செப். 4-
1978ஆம் ஆண்டு திருமண சட்டத் திருத்தமானது பிள்ளைகளை தன்மூப்பாக மதமாற்றும் விவகாரத்திற்கு ஒரு தீர்வின ஏற்படுத்தும் என்று மூத்த அமைச்சர் ஒருவர் உறுதிமொழி வழங்கியிள்ளார். மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அஸிஸின் இந்த உறுதிமொழியினை மசீச வெகுவாக வரவேற்கிறது. இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு அமைச்சர் நஸ்ரின் அறிக்கையானது நம்பிக்கையினை ஏற்படுத்துவதாக மசீச மத நல்லிணக்கம் பிரிவின் தலைவர் டத்தோஹீ தி லியான் கெர் சுட்டிக்காட்டினார்.
இந்த உத்தேச சட்டத் திருத்தம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்கும் ஒன்றாகவும் இச்சட்டத் திருத்தம் விளங்கும். ஒருதலைப் பட்சமாக பிள்ளைபளை மதம் மாற்றும் செயலும் ஒரு முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘Law Reform Act amendments must be fair to spouse who converts to Islam’ Although the Bill informs on solving the disputes between the husband and wife in a divorce including custody of children, Wanita MCA observes that news reports do not mention if the Bill will touch on unilateral conversion of minor children by a converting spouse,” she சைட் https://www.malaysiakini.com/news/353726
MCCBCHST in the dark over proposed amendment to Law Reform (Marriage and Divorce) Act 1976 BY ZAFIRA ANWAR – 13 SEPTEMBER 2016 @ 7:53 PM Read More : http://www.nst.com.my/news/2016/09/172884/mccbchst-dark-over-proposed-amendment-law-reform-marriage-and-divorce-act-1976
Interfaith group says can’t agree to marriage law changes without sighting draft
BY SYED JAYMAL ZAHIID
– See more at: http://www.themalaymailonline.com/malaysia/article/interfaith-group-says-cant-agree-to-marriage-law-changes-without-sighting-d#sthash.UBzMNlBZ.dpuf
Azalina: Non-Muslims shouldn’t speak about my religion
Sheith Khidhir Bin Abu Bakar
May 28, 2016
She says respecting sensitivities is part and parcel of fostering harmony in a multicultural country.
http://www.freemalaysiatoday.com/category/nation/2016/05/28/azalina-non-muslims-shouldnt-speak-about-my-religion/
மலேசியன், எல்லாவற்றயும் நீங்களே எழுத்திடடா , நாங்க என்னத்த எழுதறது ?
திரு Dhilip 2 , நன்றி. எல்லாவற்றையும் நான் எழுதவில்லை. தங்களின் கவனத்திற்கு (இறுதியாக இந்த விவகாரம் குறித்த எனது கருத்தையும் தந்துள்ளேன் கத்தரிக்காமல் வெளியீட கேட்டுக்கொள்கிறேன்) எனது கருத்தை இன்னும் எழுதவில்லை. அதனை முழுமையாக எழுத தகவல்களை சேகரித்துள்ளேன், எனது கருத்து 2 பாகமாக இருக்கும். ஆகவே திரு Dhilip 2 , அவர்களே நீங்களும் திருமணம், மணவிலக்கு தொடர்பான, 1976-ஆம் ஆண்டு சட்டத்தின் 164-ஆவது பிரிவை திருத்தம் குறித்து பயனுள்ள கருத்துகளை எழுதலாமே.
மலேசியன் நீங்கள் ஆயிரம் கருத்துக்கள் சொன்னாலும் அம்னோ உங்கள் வாதமோ அல்லது அணைத்து தரப்பினர் வாதங்ககளை கேட்கபோவது இல்லை. அம்னோ சொல்வது அதுதான் சட்டம்.
செழியன் நீங்கள் என் கண்ணை திறந்த, கண் திறப்பாளர்……அம்னோ சொல்வது அதுதான் சட்டம்.
படித்ததில் பிடித்தது (முகநூலில்)
Manimaran மணி
2 hrs ·
கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது.
வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.
கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும்.
-எழுத்தாளர் ஜெயகாந்தன்
நண்பர்களே (seliyan Dhilip 2 )
உங்களின் நிலையில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி, நெல்சன் மண்டேலா சிந்தித்து செயலற்று இருந்தால் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஆங்கிலேயரின் ஆட்சிலிருந்து விடுதலை பெற்றிக்க முடியாது.
நெல்சன் மண்டேலா வெற்றி மொழி:
1.ஒரு வேலையை செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்.
2.உயர்ந்த சிந்தனை உயர்ந்த மனதிலிருந்தே வருகின்றது.
3.நீங்கள் உங்கள் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்த விரும்பினால், அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பிறகு அவர் உங்கள் பங்குதாரர் ஆகிவிடுவார்.
4.சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது அஹிம்சை ஒரு நல்ல கொள்கை.
5.ஒரு நல்ல தலைமை மற்றும் ஒரு நல்ல இதயம் ஆகியவை எப்போதுமே ஒரு வல்லமைமிக்க இணை.
6.தண்ணீர் கொதிக்கத் துவங்கும்போது அதன் வெப்பத்தை அணைப்பது முட்டாள்தனமான செயல்.
மலேசியன் அவர்களே எதுவெதுக்கோ முடிப்போடு விட்டு, இவர்தான் காந்தி, என்று முடிப்பது, உங்களை சரி என்று ஆகிவிடாது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காந்தி அவர்கள் நிறுத்திய சீதாராமரையரை வென்று இந்தியன் நேஷனல் காங்கிரஸ் தலைவரானதும், காந்தி கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறினார். காந்தியின் ஜாலராக்கள் அனைவரும் அப்படியே. பிறகு, ஜனநாயக வழியில் வென்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தலைவர் பதவியை ராஜினாமா செய்து, கட்சியி முழு பொறுப்பையும் காந்தியிடமே விட்டு, புது கட்சியான போர்வர்து ப்ளாக்கை நிறுவி, தலைவர் ஆனார். இது நம்ம ஊரு மா இ கா தலைவர்னு வெச்சுக்குங்க, அவன் பொண்டாடி புள்ள குட்டி, வைப்பாடின்னு செட்டில் ஆகியிருப்பான். மலேசியன் அவர்களே, உங்கள் வாசகத்தை படித்தால் ….
நான் முன்பே கூறி இருந்தேன் –எவனுடைய பேச்சையும் நம்ப கூடாது— எழுத்து மாற்றப்படாத வகையில் சட்டம் எழுதப்பட வேண்டும்– சட்ட வல்லுநர்கள் நன்றாக ஆராய்ந்து ஓட்டை இல்லா சட்டம் இயற்றப்பட வேண்டும். இல்லாவிடில் இது ஒரு தொடர் கதை தான்– நம்பிக்கை நாயகனையும் அவனை சார்ந்தவர்களையும் நம்பவே முடியாது அதிலும் இந்த துரோக MIC கும்பலை நம்பவே முடியாது.
முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். ஒருவர் அல்லது ஒரு மன்றம் இயற்றும் சட்டம் என்பது காலத்துக்கும் செல்லுபடியாகாது. காரணம் கால நேர மாற்றங்கள் பல விஷயங்களை மாட்ட்றி அமைக்கும். உதாரணத்திற்கு மக்களை ஏமாத்துவது என்பது குற்றம், ஆனால் இன்று அரசியல் வாதிகள் அதை செய்யலாம். முன்பு கணவனை விவாகரத்து செய்ய பெண்களுக்கு அனுமதி இல்லை, ஆனால் இன்று மலேசியாவில் 50,000 இந்திய பெண்கள், தலா ஆளுக்கு 3 குழந்தைகள் விகிதம் என்று, அப்பா இல்லாமல் குழந்தைகளை வளர்க்க கற்று கொண்டார்கள். சிலர் பங்களா-ஆண்களின் துணையுடன்….30 லட்சம் தமிழர்களின் எண்ணிக்கையில் 5% பெண்கள் கணவன் இல்லாமல் வாழ பழகி கொண்டனர் … சரி, மா இ கா போல மக்களை ஏமாத்தாமல், நேராக விசயத்திற்கு வருகிறேன். அமெரிக்காவின் சட்ட அமைப்பு சற்று பரிணாம வளர்ச்சி அடைந்து, காலத்துக்கும் மாற்றங்களை கொண்டு செல்லும் வழிகளை கண்டுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு கணவன் ஒரு மனைவியை கொன்று , தனது truck பின் பகுதியில் அடைத்து வைத்து விட்டு, 2 நாள் தேடிய பின், truckil மாட்டி இறந்தால் என்று காவல்துறையிடம் வாக்கு முகுளம் தருகிறார். அவர் வழக்குக்கு நீதி மன்றம் வந்ததும், வாதி மற்றும் பிரதி வாதிகள் தத்தம் வாதங்களை முன்வைக்கிறார்கள். யாரிடம் என்றால் , நீதிபதியிடம் அல்ல. மாறாக அங்கே ஒரு பஞ்சாயத்து தாரர்கள் என்று ஒரு பிரிவினர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் சட்டம் படித்தவர்கள் அல்ல. எனவே பொய் பித்தலாட்டம் தெரியாது. அவர்கள் கல்விமான்கள், சாதாரண பணியாட்கள், வயதானவர்கள், பொது மக்கள். இவர்கள் அந்த வழக்கை செவி மடுத்து, பிறகு எல்லாரும் ஒன்று கூடி, ஒரு தனி அறையில் கலந்து பேசி, நீதிபதிக்கு தவறு இளைத்திருக்கானா இல்லையா இந்த குற்றவாளி என்று, ஒரு முன் மொழிவை தருவார்கள். அதை படித்த நீதிபதி, மனு நீதியாக குற்றம் இளைக்க பட்டிருக்கிறதா இல்லையா என்று முடிவெடுத்து, தீர்ப்பு வழங்குவார். அப்படி இருக்கும் பட்சத்தில், மனு நீதியாக தான் தீர்ப்பு வழங்க படுகிறது. நம்ம ஊர் நாடைமைக்கெல்லாம், அந்த ஊர்ல பெரிய மவுசு. ஆனால் இங்கே அப்படி இல்லை. மனுநீதியாக பார்த்தல் 24 மில்லியன் வீடு வாங்கிய கீர் தோயோ வுக்கு 1 வருடம், 7 வெள்ளி 50 காசு சார்டின் திருடிய இளைஞனுக்கு 12 வருடம். பெரியவர் ஒருவர் இருக்கிறார், அவர் 2.6 பில்லியன் தனது வைப்பு கணக்கில் இருந்ததை மறைக்க என்ன பண்ணி கொண்டிருக்கிறார் என்று உலகமே அறியும். இத லட்சணத்தில், அதுல மாற்றத்தை கொண்டு வா, இதுல மாற்றத்தை கொண்டு வா என்பது, மக்களை வைச்சு காமிடி பண்றதுக்கு சமம் !
மலேசியன் wrote on 13 September, 2016, 22:27
அன்பார்ந்த செம்பருத்தி.கோம் ஆசிரியர் குழுவினர் கவனத்திற்கு
திருமணம், மணவிலக்கு தொடர்பான, 1976-ஆம் ஆண்டு சட்டத்தின் 164-ஆவது பிரிவை திருத்தம் செய்ய அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரை பற்றி இருவர் மட்டுமே ஆக்க பூர்வமான கருத்தினை தெரிவித்துள்ளனர். நம்மிடையே பல சட்ட வல்லுனர் இருப்பினும் யாரும் பயனுள்ள கருத்துகளை எழுதவில்லை. 1976 ஆம் ஆண்டே இந்த விவகாரத்திற்கு நல்ல தீர்வு கண்டிருக்க வேண்டும். சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் இந்த விவகாரத்திற்கு நல்ல முடிவு கிடைக்குமா? மேற்குறிப்பிட்டுள்ள எனது அபிப்பிராயத்துக்கு ஏற்ற கேள்வியும் பதிலும்.
திருமணம், மணவிலக்கு தொடர்பான, 1976-ஆம் ஆண்டு சட்டத்தின் 164-ஆவது பிரிவை திருத்தம் செய்ய அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரை பற்றி நமது பல்கலைகழக பேராசிரியர்கள், அறிஞர்கள், விரிவுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
மலேசிய நண்பன் 9-10-2016
நண்பன் மேடை
தொல்காப்பியன், பெட்டாலிங் ஜெயா
கே; மலாய், சீன சமூகத்தைச் சேர்ந்த பல்கலைகழக பேராசிரியர்கள், அறிஞர்கள், விரிவுரையாளர்கள் நாட்டில் நடக்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அரசின் நிலைபாடு குறித்து துணிந்து விமர்சனம் செய்யும் போது, நமது இந்திய ஆய்வியல் துறையின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எதுவுமே நடவாது போல வாயை திறக்கவே மறுக்கிறார்களே..?
ப; அவர்கள் வாயை திறப்பது என்பது சற்று சிரம்மான காரியம்தான், மறைந்த ஆதி.குமணன் அடிக்கடி ஒன்றை கூறுவார். வாய் என்பது சாப்பிடுவதற்கு மட்டும் அல்ல, தேவைப்படும் போது பேசவும் வேண்டும் என்பார். எத்தனையோ விஷயங்களில் பல்கலைகழக பேராசிரியர்கள் பலர் துணிச்சலாக வெளியிட்ட கருத்துகள், இன்று சட்டமாகக்கூட இயற்றப்பட்டு இருக்கின்றன. ஆனால், நமது கல்விமான்களான பேராசிரியர்கள், அப்படி ஏதும் பேசிவிட்டால் தங்கள் பதவிக்கு ஆபத்தாகி விடும் என்ற அச்சமோ என்னவோ தெரியவில்லை. வாயை திறக்க சிரம்ப்படுகிறார்கள். ஆனால், நாங்களும் இருக்கிறோம் என்பதை அடிக்கடி காட்டிக்கொள்ள எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளில் மதிப்புரை வழங்குவதிலும் அதனை ஆய்வு செய்வதிலும் அவர்கள் காட்டும் ஆர்வம் அளப்பரியது.
மேடை கோணலாக இருந்தாலும், வாலை மட்டும் சுருட்டி கொண்டு ஆடுங்கள் என்பது விவேகம் கிடையாது மலேசியன் அவர்களே ….
Dhilip 2 wrote on 13 October, 2016, 14:54
மேடை கோணலாக இருந்தாலும், வாலை மட்டும் சுருட்டி கொண்டு ஆடுங்கள் என்பது விவேகம் கிடையாது மலேசியன் அவர்களே …Dhilip 2 wrote on 9 November, 2016, 3:37
தனிமனித விமர்சனமே கொள்கையாக கொண்டுள்ள சின்ன பையன் அவர்களே, நீங்கள் என்ன படித்துள்ளீர்கள் ? விவாதம் சரி சமமானவர்கள் மத்தியில் தான் நடக்க வேண்டும் ? நான் பேராசிரியர் என்பதில் மாற்று கருத்து இல்லை . இதோ இங்கே : http://iic.edu.kh/graduate/panel-expert/img/lecturer/Assoc.%20Prof.%20Nachimani%20Charde.pdf
http://advan-kt.com/panelexpert.html
https://www.facebook.com/nachimani.chardesinggaran?fref=ts
ஐயா Dhilip 2 தாங்கள் பேராசிரியர் என்று தெரிவித்துள்ளீர்கள்., ஏன் நீங்கள் திருமணம், மணவிலக்கு தொடர்பான, 1976-ஆம் ஆண்டு சட்டத்தின் 164-ஆவது பிரிவை திருத்தம் குறித்து பயன்மிக்க பரிந்துரையினை தெரிவிக்களாமே.