கெராக்கான் 14வது பொதுத் தேர்தல் வேட்பாளர்களில் 90விழுக்காட்டினரை அடையாளம் கண்டுள்ளது

maகெராக்கான்     14வது   பொதுத்   தேர்தலில்   அதற்கு   ஒதுக்கப்படும்   45   நாடாளுமன்ற,  சட்டமன்றத்   தொகுதிகளுக்கான   வேட்பாளர்களில்   90  விழுக்காட்டினரை   அடையாளம்   கண்டுவிட்டது.

இதனைத்   தெரிவித்த    அதன்    தலைவர்   மா   சியு  கியோங்,   எஞ்சிய   10  விழுக்காட்டு  வேட்பாளர்களும்   மாத  இறுதிக்குள்   முடிவு   செய்யப்படுவார்கள்    என்றார்.

“தேர்தல்   எப்போது  என்று   தெரியாவிட்டாலும்   அதற்கான   ஆயத்தங்களைச்     செய்து  விட்டோம்”,  என்றாரவர்.

கெராக்கான்    சில  இடங்களை   மற்ற    பாரிசான்   நேசனல்   உறுப்புக்   கட்சிகளுடன்    மாற்றிக்கொள்ளவிருப்பதாக   அவர்  சொன்னார்.  பகாங்கில்,    ஒரு   தொகுதி  மசீசவுடன்  மாற்றிக்கொள்ளப்படும்.

களமிறக்கப்படும்   வேட்பாளர்களில்  பலர்   புது  முகங்கள்    என்றும்  மா  கூறினார்.