இன்று காலை மரணமுற்ற பாஸ் ஆன்மிகத் தலைவர் ஹருன் டினின் மறைவுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.
“நாட்டுக்கு நிறைய பங்களிப்புச் செய்துள்ள, நான் மிகவும் மதிக்கும் ஒரு இஸ்லாமியத் தலைவரை மலேசியா இழந்து விட்டது.
“தனிப்பட்ட முறையில் நானும் என் குடும்பத்தாரும் நெருக்கமான நண்பரை இழந்து விட்டோம்”, என முகநூலில் நஜிப் குறிப்பிட்டிருந்தார்.
ஹருன், செயிண்ட் பிரான்சிஸ்கோவின் ஸ்டேன்போர்ட் மருத்துவமனையில் காலமானார். அவர் இருதயக் கோளாறுகளுக்குச் சிகிச்சை பெறுவதற்காக அம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கட்சி சார்பாக ஹருன் குடும்பத்தாருக்கு இரங்கலைத் தெரிவித்தார்.
ஹருன் பாஸின் தொடக்கக் காலத் தலைவர்களில் ஒருவர் என்றும் கட்சிக்காகவும் இஸ்லாத்துக்காகவும் நிறைய பங்காற்றியுள்ளார் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இஸ்லாத்திற்க்கா அல்லது umno விற்கா ?
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எம்பெருமானை பிராத்திக்கின்றோம்.
ஹா ஹா
தேனீ ! உங்கள் சைவ சமைய பற்றுதலை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன் !!!
உயிர் உடலை விட்டுப் பிரிந்த பிறகு இது இஸ்லாமியன் உயிர், கிறிஸ்துவனின் உயிர், சைவனின் உயிர் என்று எவராலும் பாகுபடுத்த முடியாது. எல்லா பாகுபாடும் இந்த சடமான உடல் இருக்கும் வரைக்கும்தான் என்று சைவம் சொல்லுவதை உலகர் புரிந்து கொண்டால் இந்த உலகமே நமக்கு சொர்க்கமாகி விடும். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருமூலர் வழி திருமந்திரத்தில் சொல்லப்பட்டது தமிழர் இறைச் சிந்தனைதான். சைவத்தின் கோட்பாடுதான். என்ன செய்ய, தமிழர் அயலார் நெறி வழி பின்பற்றி கெட்டார். சிவ சிவ.